கையை சுத்தமாக கழுவது மூலம் கையில் சேரும் கிருமிகள் அழிக்கப்பட்டு நோய் வராமல் தடுக்க முடியும் .உடல் ஆரோக்கியம் பேணப்படும்.சாப்பிடுவதற்கு முன், கழிவறைக்கு சென்று வந்த பின் கையை கழுவதன் அவசியத்தை வலியுறுத்தி உலகம் முழுக்க அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச உலக கை கழுவும் தினம் ( Global Handwashing Day ) ஆக அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் சுகாதாரத்துடன் வாழவேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், உலக கை கழுவும் தினம் தற்போது பள்ளிக் கூடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாணவர்களுக்கு கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என்று விளக்கி சொல்லப்படுகிறது.
இநிலையில் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மக்தூமியா உயர்நிலைப்பள்ளியில் கை கழுவும் தினம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கிருஸ்ணவேணி தலைமை வகித்தார்.
ஆசிரியர் லலிதா உணவு சாப்பிடுவதற்கு முன் எப்படி கைகளை கழுவ வேண்டும் என்று மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். முன்னதாக மாணவ,மாணவியர் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பட விளக்கம்: யுனிசெப், பிரஸ் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா சார்பில் கைகழுவும் தினம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கொண்டாடப்பட்டது.மாணவியர் கைகழுவும் அவசியத்தை செய்முறையில் விளக்கினர் .படம்:தினகரன்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.