படம்: சாலிஹ் ஹுசைன்
கீழக்கரை தனியார் கட்டடத்தில் ஐ.ஓ.பி., வங்கி, நூலகம், தபால் அலுவலகம் இயங்கி வந்தன. கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது.
தபால் அலுவலகம் இந்த வார இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
உயிர் பலி அபாயம் இருப்பதாக, கட்டட உரிமையாளர் அலாவுதீன் புகாரை அடுத்து, கீழக்கரையில் ஆர்.டி.ஓ., லாரன்ஸ், கட்டடத்தை ஆய்வு செய்த பின் கூறுகையில், "கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே கட்டடத்தை இடிக்க உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றார்.
கட்டட உரிமையாளர் கூறுகையில், ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, கட்டடம் இடிக்கப்படும் என்றார்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.