Friday, October 19, 2012

கீழ‌க்க‌ரை ப‌ள்ளியில் த‌மிழ‌க‌ அர‌சின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா !

கீழக்கரை கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் த‌மிழ‌க‌ அர‌சின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் சாதிக், கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் துணைத்தலைவர் முகைதீன் அப்துல்காதர், நகராட்சி கமிஷனர் முகமது முகைதீன், கைரத்துல் ஜலா லியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இபுராகிம், தமிழசிரியர் சையது அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் முகமதுமீரா வரவேற்றார். இதில் முன்னாள் பள்ளி தாளாளர் முஹ்மூது கரீம், கல்விக்குழு உறுப்பினர்கள் சுஐபு, பரீத், ரிஸ்வான், நவாஸ், லத்தீப், மரைக்காயர், காதர்சுல்தான், 5வது வார்டு கவுன்சிலர் சாகுல்ஹமீது ஆகியோர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சவுகர் சாதிக் அலி நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.