இஸ்லாமியர்களின் ஈகை திருநாளாம் பெருநாளையோட்டி குர்பானி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் கீழக்கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டிருந்தும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளைகளான கிழக்குத்தெரு,தெற்குதெரு,500 பிளாட் ஆகியவற்றின் சார்பாக குர்பானிக்கான 60 ஆடுகள்,20 மாடுகள் மற்றும் 2 ஒட்டகங்கள் குர்பானி கொடுக்க உள்ளனர்.இதற்காக ஆந்திர மாநிலம் மனலூரிலிருந்து இரண்டு ஒட்டகங்கள் கீழக்கரைக்கு வரவழைக்கப்பட்டு 500 பிளாட்டில் உள்ள நசீர் அவர்களின் தோட்டத்தில் பராமரிக்கப்படுகிறது.
இத்தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிழக்குதெரு பகுதி செயலாளர் ஹாஜா முகைதீன் கூறினார்.உடன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆரிப்கான் உடனிருந்தார்.
ஒட்டகங்களை காண்பதற்கு அப்பகுதியில் ஏராளமான சிறுவர்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
கீழக்கரை முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் இஸ்லாமியா மக்கள தாங்கள் குர்பாணி கொடுப்பதற்கு ஆடுகளை விலைக்கு வாங்கிய வண்ணம் உள்ளனர்.ஒட்டகம் மற்றும் ஆடுகள் அறுக்கப்பட்டு ஏராளமானோருக்கு இறைச்சிகள் விநியோகிக்கப்படும்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.