கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான வாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் ஏகம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார் வேதியியல் பேராசிரியர் சிவபாலன் வரவேற்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் பலராமன் ,ஏகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் மணி,மன நல மருத்துவர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர்.
டாக்டர் பிரியதர்ஷினி பேசுகையில், மாரடைப்பு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் போன்றவைகள் எதிர்பாராமல நடைபெறும் போது தற்காப்பு முதலுதவிகள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.மேலும் மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் பேராசிரியர் அழகியமீனாள்,முதல்வர் காப்பீட்டு திட்ட அலுவலர் ராஜசேகர் மாவட்ட அலுவலர் அஸ்லாம்,108 ஆம்புலண்ஸ் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ராம்குமார் கலந்து கொண்டு பேசினர், ஏகம் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளர் மாலிக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் பேரசிரியர் கார்த்திகேயன் உள்பட பலர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.