தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானவர்கள்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கீழக்கரையிலும் டெங்குவால் உயிரழப்பும்,நோயின் தாக்கத்தால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கீழக்கரை நகராட்சி,சுகாதரத்துறை,தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி சதக்கத்துன் ஜாரியா பள்ளி,கைராத்துல் ஜலாலியா பள்ளி,செய்யது ஹமீதா கல்லூரி சார்பிலும் மற்றும் இஸ்லாமியா பள்ளிகள் சார்பிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வடக்குத்தெரு பகுதி மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கப்பட்ட பேரணியில் தலைவர் ராவியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிஷனர் முகம்மது முகைதீன் ,மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன்,தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா,காங்கிரஸ் நகர் தலைவர் ஹமீதுகான்,கவுன்சிலர்கள் சுரேஷ்,பாவா,இடிமின்னல் ஹாஜா,சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் பேரணி துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்ட இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியில் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம்,முன்னாள் கவுன்சிலர் ஜமால் இப்ராகிம்,பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் ஆகியோர் பேரணி துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் டெங்கு ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்தனர்.
இப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்களை வீடு வீடாக சென்று விநியோகித்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.