பட விளக்கம்:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.ஐ.ஜி ராமசுப்பிரமணியன் பரிசு வழங்கினார்
கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 37வது விளையாட்டு விழா ஆண்கள்,பெண்கள் என இரண்டு நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் பெண்கள் பள்ளியில் ஆயிஷத் சுலைஹா அமீர் அப்துல் காதர் தேசிய கொடியை ஏற்றி விழாவை துவங்கி வைத்தார்.ஹைருன்நிஷா பாரூக் ஒலிம்பிக் கொடியையும் குர்ரத் நிஷா ஹமீது அப்து காதர் பள்ளி கொடியையும் ஏற்றி வைத்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் சஹ்ர்பானு முகைதீன் வரவேற்றார்.உடற்கல்வி ஆசிரியை நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் ஆண்கள் பள்ளியில் டி.ஐ.ஜி, ராமசுப்பிரமணி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.சங்க பொருளாளர் அகமது அன்வர் ஒலிம்பிக் கொடியையும்,கீழக்கரை யூசுப் சிலைஹா மருத்துவமனை இயக்குநர் அப்துல் காதர் பள்ளி கொடியையும் ஏற்றி வைத்தனர்.பள்ளி தாளாளர் ஹமீது அப்துல் காதர் வரவேற்றார்.உடற் கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.