Saturday, October 13, 2012

‌ த‌ட‌க‌ள‌ போட்டிக‌ளில் ப‌ரிசுக‌ள் குவித்து இஸ்லாமியா ப‌ள்ளி மாண‌வ‌ர் சாத‌னை !

 இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளியில் 8வ‌து ப‌டிக்கும் மாண‌வ‌ர் அஹ‌ம‌து அசீம்
 
ராமநாதபுரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே யான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

விழாவிற்கு ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் லத்திகா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆய்வாளர் விக்டர் பொன்ராஜ் ஒலிம்பிக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். விழாவில் நேசனல் அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜமுத்து வரவேற்றார். பள்ளியின் ஆலோசகர் சங்கரலிங்கம், துணை செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் 100 மீட்டர், 200 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட போட்டிகள், நீளம் தாண்டுதல், ஈட்டி எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் சுமார் 70க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர்.

இப்போட்டிக‌ளில் இஸ்லாமியா மெட்ரிக்  ப‌ள்ளியில் 8வ‌து ப‌டிக்கும் மாண‌வ‌ர் அஹ‌ம‌து அசீம்  14 வ‌ய‌துக்குட்ப‌ட்டோருக்கான‌  போட்டியில் மாவ‌ட்ட‌ ஜீனிய‌ர் அள‌விலான‌  த‌னிந‌ப‌ர் சாம்பிய‌ன் ப‌ட்ட‌த்தை வென்றார்.

இவ‌ர் 100 மீட்ட‌ர் போட்டியில் முத‌ல் ப‌ரிசையும்(ம‌ண்ட‌ல‌ அளவில் தேர்வு),200 மீட்ட‌ர் போட்டியில் முத‌ல் ப‌ரிசையும்(ம‌ண்ட‌ல‌ அள‌வில் தேர்வு),வ‌ட்டு எறித‌லில் 2ம் ப‌ரிசையும்(ம‌ண்ட‌ல அளவில் தேர்வு),குண்டு எறித‌லில் 3ம் ப‌ரிசையும் வென்றார். 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை நேசனல் அகடாமி பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா வழங்கினார்.

வெற்றி பெற்ற மாணவரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகிம் மற்றும் முதல்வர் மோபல் ஜஸ்டஸ் பாராட்டினர்.

4 comments:

 1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்October 13, 2012 at 6:10 PM

  இதயம் கனிந்த நல்வாழத்துகள். பரிசுகள் பல பெற்று வெற்றிக் கொடி நாட்டி வெற்றி களம் கண்ட மாணவச் செல்வன் அகமது ஹசீமுக்கும், அவனை உருவாக்கிய பள்ளித் தாளாளர் ஆலி ஜனாப் எம்.எம்.கே.எம். முகைதீன் இபுறாகீம் அவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் அவர்களுக்கும், ஊக்கமூட்டி உறு துணையாக இருந்த தாய் தந்தையருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்..

  இஸ்லாமிய மெட்ரிக பள்ளிகள் நடப்பு ஆண்டில் பற்பல வெற்றிகள் மூலம் பெருமிதம் கொள்வதை கணடால் கண் பட்டு படும் போல் தெரிகிறது.. சொல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பது மூத்தோர் வாக்கு.. படிகாரம் தேடிக் கொள்ளுங்கள்..

  சூரா இக்லாஸ் இறக்கப்பட்டதின் நோக்கமே அதுதான்..

  ReplyDelete
 2. எனது அன்பு மகனார் அஹமது அஸீம், இறைவனின் துணை கொண்டு விளையாட்டுத் துறையில் மென் மேலும் பல வெற்றிகளை குவித்து, உலகளாவிய அளவில், இளம் வயதிலேயே, பார் போற்றும் உன்னத நிலையினை அடைய மனமார வாழ்த்துகிறேன்.

  "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை
  சான்றோன் எனக் கேட்ட தாய்" என்ற திருவள்ளுவனின் வாக்கிற்கிணங்க பெற்றோரும் உற்றோரும், நண்பர்களும், அன்பர்களும் மகிழ்வு கொள்ளும் வகையில், பெருமிதம் கொள்ளும் நிலையில் தொடரட்டும் உன் வெற்றிகள் மேலும்... மேலும்...

  என்றும் வாழ்த்தும்
  சின்ன வாப்பா

  ReplyDelete
 3. எனது அன்பு மகனார் அஹமது அஸீம், இறைவனின் துணை கொண்டு விளையாட்டுத் துறையில் மென் மேலும் பல வெற்றிகளை குவித்து, உலகளாவிய அளவில், இளம் வயதிலேயே, பார் போற்றும் உன்னத நிலையினை அடைய மனமார வாழ்த்துகிறேன்.

  "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை
  சான்றோன் எனக் கேட்ட தாய்" என்ற திருவள்ளுவனின் வாக்கிற்கிணங்க பெற்றோரும் உற்றோரும், நண்பர்களும், அன்பர்களும் மகிழ்வு கொள்ளும் வகையில், பெருமிதம் கொள்ளும் நிலையில் தொடரட்டும் உன் வெற்றிகள் மேலும்... மேலும்...

  என்றும் வாழ்த்தும்
  சின்ன வாப்பா

  ReplyDelete
 4. ♥♥♥♥ super ♥♥♥♥♥

  ♥♥♥♥♥♥♥♥♥♥ islamiah rockzzzzzzzz ♥♥♥♥♥♥♥

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.