Saturday, October 1, 2011

கீழக்கரையில் பத்திரமுகவர்கள் அடாவடி ! மாணவர்கள் பாதிப்பு !

அனைத்து பள்ளி ,கல்லூரிகளிலும் மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பத்திர தாள்களில் பூர்த்தி செய்து மனு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கீழக்கரையில் உள்ள பத்திரதாள் முகவர்களிடம் ஏராளமான மாணவர்களும் ,பெற்றோர்களும் பத்திரம் வாங்குவதற்கு செல்கிறார்கள்.இதை பயன் படுத்தி பத்திர முகவர்கள் பத்திரம் தீர்ந்து விட்டதாக கூறி விலையை அதிகபடுத்தி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமின்றி பத்திர முகவர்கள் தாங்களே பாரத்தை பூர்த்தி செய்வதாக கூறி கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து தர ரூபாய்50 லிருந்து ரூ100 வரை பொது மக்களிடம் பெற்று கொள்கிறார்கள். நாங்களே பூர்த்தி செய்து கொள்கிறோம் என்பவர்களுக்கு பத்தரம் தர மறுத்து விடுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஆயிசத்துல் பஸ்ஸரா கூறுகையில்,
என் மகனுக்கு உதவி தொகை பெறுவதற்கு 10ரூபாய் பத்திரம் வாங்க சென்றேன். நானே பத்திரத்தை பூர்த்தி செய்கிறேன் என்று கூறி பத்திரம் கேட்டேன் அதற்கு பத்திர முகவர்கள் எங்கள் கம்ப்யூட்டர் சென்டரில் பத்திரத்தை டைப் செய்ய ரூ 90 தந்தால் தான் பத்திரம் தருவோம் இல்லையென்றால் பத்திரம் தரமுடியாது என்றனர். வறுமையில் இருப்பதால்தான் உதவி தொகை பெறுகிறோம் அதை பெறுவதற்கான மனுவுக்கே பணம் தர வேண்டியுள்ளது என்றார் வருத்ததுடன்.

இது குறித்து பத்திர விற்பனையாளர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சண்முகரத்தினத்திடம் கேட்டபோது, எங்களிடம் டைப் செய்தால் மட்டுமே பத்திரம் கொடுப்போம் எங்கே சென்று புகார் சொல்லுங்கள் எந்த அதிகாரியும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றனர்.

இது குறித்து உயர் அதிகாரியிடம் கூறிய போது, இது குறித்து பலமுறை எங்களிடம் புகார் வந்துள்ளது. ஏற்கெனவே அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளோம் இது குறித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.




2 comments:

  1. vision of kilakarai 2020October 2, 2011 at 12:55 PM

    ENNA KOTUMAITA ITHU
    ATAVATI THANATHAI THATTI KAYTTAL PATHIL EPPATI IRUKIRATHU PARTHIRKALA MANTHARKALY
    KARANAM ETHUVAKA IRUKKUM?
    ANNA HAZARE KU JAI

    ReplyDelete
  2. vision of kilakarai 2020October 2, 2011 at 1:00 PM

    ITHU SAMPANTHAMAKA PALA MURAI PUKAAR VANTHULLATHAKA UAR ATHIKARI KURI ULLAR NATAVATIKAI EPPOTHU? THATUPATHU ETHU? LANJAMA?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.