Sunday, February 26, 2012

தரக்குறைவாக பேசியதாக நகராட்சி ஊழியர் புகார் !பொய் புகார் என‌ நகராட்சி தலைவர் மறுப்பு !


கீழக்கரை நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணி புரிந்து வரும் முருகன் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் வேலையை முடித்து விட்டு முருகன் நகராட்சி அலுவலகம் வந்தாராம் இவரிடம் பணி சம்பந்தமாக கேள்வி கேட்டதோடு தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாக நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவின் கணவர் அமீர் ரிஸ்வான் மீது மேற்பார்வையாளர் முருகன் நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில்,
ரிஸ்வான் ஒருமையில் தான் ஊழியரை பேசினார் நகராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையிடுவது சரியல்ல என்றார்

இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவது ,

தற்போது தனியார் கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இங்கு மேற்பார்வையாளர் முருகன் பணியில் இல்லாததால் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று தகவல் வந்தது எனவே எனது கணவரை பார்த்து வருமாறு அனுப்பினேன் அவர் நகராட்சி அலுவலகம் சென்ற போது குப்பை கிடங்கில் காலை 11.30 வரை மேற்பார்வையிட வேண்டிய முருகன் காலை 10.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்துள்ளார் எனவே குப்பை கிடங்கை மேற்பார்வையிட செல்லவில்லையா என்று எனது கணவர் கேட்ட போது "நீ யாருய்ய கேட்பதற்கு" என்று முருகன் தான் மரியாதைகுறைவாக பேசியுள்ளார்.உடனே என் கணவர் எனக்கு போன் மூலம் தகவல் சொன்னார் நான் அங்கு விரைந்து அவரை பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினேன்.இது தான் நடந்தது. தனியார் குப்பை கொட்ட நமக்கு இடம் தந்துள்ளனர் அவற்றை முறையாக பராமரிப்பது நமது கடமை எனவே கீழக்கரையை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் பணிக்கு ஏன் செல்லவில்லை கேட்க உரிமை உள்ளது எனவே ஊர் நலனுக்காக‌ என் கணவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது. இது முழுக்க ,முழுக்க உள் நோக்கத்துடன் சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டு என மறுப்பு தெரிவித்தார்.


இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஹமீது கான் கூறுகையில் ,
இந்த முருகன் மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளது.பெரும்பாலான நேரம் பணிக்கு செல்லாமல் அலுவலகத்தில் தான் உள்ளனர். மேலும் இவர்கள் யாருமே யூனிபார்ம் அணிவதில்லை.மேலும் அரசு ஊழியரான அவரிடம் பணி நேரத்தில் பணிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. கேட்டதில் தவறு இல்லை என்றார்

5 comments:

  1. திண்ணை தோழன்February 26, 2012 at 2:17 PM

    பணி நேரத்தில் பணிக்கு செல்லாமல் இருந்த பொறுப்பில்லாத நபரிடம் கனிவாக பேசுவதைவிட செருப்பால் நாலு சாத்து சாத்தி வேலைய போய்பாருட என்று சொல்லவேண்டும்

    ReplyDelete
  2. திண்ணை தோழன்February 26, 2012 at 2:34 PM

    இது ஒன்றும் புதிதல்ல நாம் பொறுமை காக்க
    அடிக்கு அடி
    அது தான் இஸ்லாம்
    ஒருமுறை பொறுப்பது இஸ்லாம் என்றால்
    இப்படி காலம் முழுக்க பொறுப்பது யார் வழி
    .ஒரு பூனை கூட அடிக்க போனால் திரும்ப சீரும்
    ஆனால் இந்த கீழக்கரை காரன் ரொம்ப நல்லவன் என்று பெயர் வாங்கியது போதும்

    ReplyDelete
  3. இவர் மீது ஏற்க்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளது வேலைக்கு உதவாத சோம்பேறி இவரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ய கீழக்கரை நகராட்சி பரிந்துரை செய்யுமா? சில தினங்களுக்கு முன்பு 18 வது வார்டு கவுன்சிலர் இவரது செயலை கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளார் என்பதை நினைவுபடுத்துகிறேன்

    by www.roadrafee.weebly.com

    ReplyDelete
  4. Dear mohd.rafeeq(avl),

    இவர் பெயர்:முருகன்(துப்புரவு மேற்பார்வையாளராக)26 February 2012

    சில தினங்களுக்கு முன்பு 18 வது வார்டு கவுன்சிலர் இவரது செயலை கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளார் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
    அவர் பெயர்:மனோகரன்(துப்புரவு பணி கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்)6 Feb 2012 செய்திகள்
    நன்றி.

    ReplyDelete
  5. சுனாமிMarch 1, 2012 at 12:15 AM

    என்னமோ நடக்குது.மர்மமாக இருக்கிறது.ஒன்றுமே புரியலை.மயக்கமாக இருக்குது.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.