Saturday, July 7, 2012

கவுன்சிலர் ஆபாசமாக பேசியதாக கூறி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா!



கீழக்கரை நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை தலைவர் ஹாஜா முகைதீன்,அலுவலக மேலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

இடிமின்ன‌ல் ஹாஜா :- க‌மிஷ‌ன‌ர் ஏன் இன்றைய‌ கூட்ட்ட‌த்திற்கு வ‌ர‌வில்லை.மாதத்திற்கு இரண்டு முறைதான் அலுவலகத்திற்கு வருகிறார்.

த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா :-இது குறித்து ஏற்கெனவே கமிசனருக்கு சுட்டிகாட்டப்ப‌ட்டுள்ளது.

கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்: தெருவிளக்கு டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா:- சென்ற‌ கூட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தெருவிள‌க்கு டெண்ட‌ரில் க‌மிஷ‌ன‌ர் ஊழ‌ல் செய்துள்ளார் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குக‌ள் ந‌க‌ருக்கு வ‌ந்துள்ள‌து.

ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா :- புகார் வ‌ந்த‌தால்தான் த‌ர‌ம் குறைந்த‌ விள‌க்குகளை ப‌ய‌ன்ப‌டுத்த‌ கூடாது என்று உத்த‌ர‌விட்டுள்ளேன்.

கவுன்சிலர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான நோட்டீஸ் குறித்து 10வது வார்டு கவுன்சிலர் அஜ்மல்கான் உள்ளிட்ட க‌வுன்சில‌ர்க‌ளிடையே க‌டும் வாக்குவாத‌ம் ஏற்ப‌ட்ட‌து. இதில் 10வ‌து வார்டு க‌வுன்சில‌ர் அஜ்ம‌ல்கான் ஆபாச‌மாக‌ பேசியதாக கூறி க‌டும் எதிர்ப்பு தெரிவித்தோடு அஜ்ம‌ல்கான் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும் என்று கூறி க‌வுன்சில‌ர்க‌ள் முகைதீன் இப்ராகிம்(18வ‌து வார்டு),சாகுல் ஹ‌மீது(வ‌து வார்டு),இடிமின்ன‌ல் ஹாஜா(20வ‌து வார்டு) ஆகியோர் குர‌ல் எழுப்பின‌ர்.மேலும் க‌வுன்சில‌ர்க‌ள் சாகுல் ஹ‌மீது,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்டோர் ந‌க‌ராட்சி ம‌ன்ற‌ த‌ரையில் அம‌ர்ந்து போராட்ட‌ம் நட‌த்தின‌ர்.இத‌னால் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து அமைதியாக இருக்குமாறு நகராட்சி தலைவர் வலியுறுத்தி கொண்டிருந்தார்.ஆனால் தொடர்ந்து கூச்சல் குழப்பமும் நீடித்து வந்த நிலையில் நகராட்சி தலைவர் சபையிலிருந்து வெளியேறினார்.

தொட‌ர்ந்து இடிமின்ன‌ல் ஹாஜா உள்ளிட்ட‌ சில‌ க‌வுன்சில‌ர்க‌ள் கேள்வி எழுப்பிய‌வாறு இருந்த‌ன‌ர்.இதை தொட‌ர்ந்து நக‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூட்ட‌ர‌ங்கில் இருந்து வெளியேறினார்.

இதை தொட‌ர்ந்து க‌வுன்சில‌ர்க‌ளும் த‌லைவ‌ருக்காக‌ காத்திருந்து அவ‌ர்களும் ச‌பையிலிருந்து வெளிறினர்.

பின்ன‌ர் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,
இன்றைய‌ கூட்ட‌த்தில் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ தீர்மான‌ங்க‌ள் அனைத்தும் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மாணங்களை ஆதரித்து உள்ளனர். ஒரு சில உறுப்பின‌ர்க‌ள் ம‌ட்டுதான் வேண்டுமென்றே பிர‌ச்சனை செய்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள் .தீர்மான‌த்தை படிக்கும் நக‌ராட்சி அலுவ‌ல‌ர்க‌ளையும் இவ‌ர்க‌ள் விட்டு வைக்க‌வில்லை.அவ‌ர்க‌ளையும் மிர‌ட்டும் தொனியில் பேசிய‌தால் அவ‌ர்கள் அதிருப்திய‌டைந்த‌ன‌ர்.தெருவிளக்கு டெண்டரில் நான் ஆரம்பத்திலிருந்து தற்போது எடுத்துள்ள ஒப்பந்தாதாரருக்கு கொடுக்க வேண்டாம் என்றேன் இவர்கள்தான் கொடுக்க சொன்னார்கள்.தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தொட‌ர்ந்து ஊருக்கான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளை த‌டுத்து வ‌ருவ‌து ந‌க‌ரின் வ‌ள‌ர்ச்சிக்கு உதவாது என்ப‌தை இவ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும் என்றார்.

க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம்:- அஜெண்டா முழுவ‌தையும் வாசிக்காம‌ல் தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்றிய‌தாக‌ சொல்வ‌தை ஏற்க‌ முடியாது.க‌லெக்ட‌ரின் க‌வ‌ன‌த்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 7, 2012 at 6:32 PM

    இவர்களுக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளத் தான் நேரம் இருக்கிறது. நேரம் போய்க் கொண்டு இருக்கிறது.

    கமிஷனர் (பொருப்பு) மீது தெரு விளக்கு டெண்டர் சம்பந்தமாக பகிரங்க ஊழல் கூறப் பட்டுள்ளதால் அவரும் அதிருப்தியில் இருக்கக் கூடும். மேலும் அவர் இராமநாதபுரம் நகராட்சியிலும் கமிஷனராக இருப்பதால் வேலைப் பளுவை காரணம் கட்டி வருகையை தவிர்க்கலாம்.

    இதனால் நஷ்டம் என்னமோ நகர் மக்களுக்குத்தான். இதற்கு ஒரே தீர்வு மக்களின் நலம் காக்க மக்கள் பிரதிநிதிகள் தலைவி உட்பட ஓர் அணியில் நின்று நகராட்சியாக உருவான காலம் முதல் நியமிக்க படாத நிரந்தர ஆணையரை உடனடியாக நியமித்து நகர் மக்களுக்கு தொய்வில்லாது தரமான, நியாயமான சேவை செய்ய ஆவணம் செய்யும்படி தமிழக அரசுக்கும் அதன் நகலை தொகுதி சட்ட மன்ற, நாடளுமனற உறுப்பினர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அனுப்பி தீர்வு காண வேண்டும்.

    மக்களின் நலனை மனதில் கொண்டு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கடசி பேதம் பாராது இது விஷயத்தில் ஒன்று பட்டு செயல் படுவார்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    ReplyDelete
  2. உங்களில் ஒருத்தன்July 27, 2012 at 2:25 PM

    கிழக்கரை நகராட்சிக்கு எத்தனையோ சேர்மன்கள் வந்து போய் இருக்கிறார்கள் பெண்கள் கூட. இந்தளவு கூச்சலோ குழப்பமோ சேர்மனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமோ நடந்ததில்லை .ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் கூச்சல் குழப்பம் .உருப்படியான எந்த விசயமும் நடந்ததாக தெரியவில்லை .இதற்க்கு மக்கள் மத்தியில் சில காரணங்கள் விவாதிக்கப்படுகிறது .அதை உங்கள் முன் வைக்கிறோம் .இவை நியாயமான காரணமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் 4 வருடங்கள் கிழக்கரை மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பே கிடையாது .
    1 .சேர்மன் அவர்களுக்கு படிப்பு அறிவும் நிதர்சன அறிவும் மிக மிக குறைவு .அதனால் கூச்சல் குழப்பங்களை கட்டுப்படுத்த அவரால் இயலவில்லை .
    2 .சேர்மன் அவர்களை ஆட்டுவிப்பது அவருடைய கணவரும் சகோதரர்களும் தான் மற்றும் சில முடிவுகள் தீர்மானங்கள் கூட இவர்களுடைய வழிக்காட்டுதலின் பெயரில் தான் நடக்கிறதாக .குற்றச்சாட்டு .
    3 சேர்மன் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்க தெரியாத அளவுக்கும்
    4 கவுன்சிலர்களோடு ஆரோக்கியமான விவாதமோ கருத்துகளை உருவாக்கும் சூழலை உருவாக்க தெரியாமை .
    5 அரசாங்க அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து விருந்தும் தடபுடலாக பிக்னிக்கும் நடத்துவதாக குற்றச்சாட்டு .
    6 நகராட்சி ஊழல் மயம் குப்பை மயம் ஆவதை தடுக்க அதிகாரிகளை
    உடனுக்குடன் செயலாற்ற ஊக்கப்படுத்தாமை.
    கவுன்சிலர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு
    1 சேர்மன் அவர்களோடு சேர்ந்து நகராட்சி பிரச்சினைகளை தீர்க்க உடன்படாமை
    2 எதற்க்கெடுத்தாலும் கூச்சல் போடுவதும் சபையை அவமதிப்பதுமாக நடப்பதும் என்று இவர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது
    3 சேர்மனும் பெண் என்பதால் ஒத்துழைப்பு கொடுத்து நடந்து பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இவர்களிடம் இல்லை என்பதாக குற்றச்சாட்டு
    ஒரே ஒரு பயன் கீழக்கரை மக்களுக்கு
    இதுவரை கீழக்கரை நகராட்சி கட்டிடம் உள்ளே என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்தது இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது மாஸா அல்லா

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.