
பட விளக்கம் :- கீழக்கரை மேலத்தெருவில் (2011ல் )திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு சேக் அலாவுதீன் கைது செய்யப்பட்ட போது எடுத்த படம் !பழைய(பைல்) படம்
சேக் அலாவுதீன் (26 ) மாயகுளத்தை சேர்ந்தவர் இவர் கீழக்கரை மேலத்தெருவில் 2011ல் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற திருட்டிலும் மற்றும் தொடர்ந்து 2012 ஜனவரி மாதத்தில் மீண்டும் மேலத்தெருவில் நடந்த திருட்டிலும் தொடர்பு இருப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார் லட்சக்கணக்கணக்கில் மதிப்புள்ள நகைகளும் மீட்டகப்பட்டது
இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 13ல் புதுமடத்தில் 33 பவுன் நகைகள் உட்பட பணம் பொருட்களை திருடிச் சென்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,காளிராஜ் மகேஷ்குமார் பரிந்துரை @பரில் கலெக்டர் நந்தகுமார் உத்தரவுப்படி, நேற்று சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சேக் அலாவுதீனை கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.