Tuesday, July 3, 2012

கீழக்கரை நக‌ராட்சி குப்பைகிடங்கு பிரச்சனை!கலெக்டரை சந்தித்த கீழக்கரை நக‌ராட்சி, ஜ‌மாத், ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ளின் பிர‌திநிதிக‌ள்!www.keelakaraitimes.com


கீழ‌க்கரை நகராட்சிக்கு சொந்த‌மான‌ இட‌ம் தில்லையேந்த‌ல் ஊராட்சி ப‌குதியில் உள்ள‌து.இங்கு கீழக்கரை பகுதி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மறுசுழற்சி முறையில் உர‌மாக‌ மாற்றுவ‌த‌ற்கு கிட‌ங்கு அமைக்க முடிவு செய்ய‌ப்ப‌ட்டு சுற்றுசுவ‌ர் க‌ட்டும் ப‌ணி ந‌டைபெற்று வ‌ந்த‌து.சில நாட்களுக்கு முன் விஷ‌மிக‌ள் சில‌ர் 200 அடிக்கு க‌ட்ட‌ப்ப‌ட‌ சுற்று சுவ‌ரை இடித்து சேத‌ப்ப‌டுத்தினர்.

இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க‌ ந‌டுத்தெரு ஜீம்மா ப‌ள்ளி வளாக‌த்தில் நடைபெற்ற‌ ஆலோச‌னை கூட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் பிர‌திநிதிக‌ள்,ஜ‌மாத்க‌ள்,ச‌மூக‌ நல‌ அமைப்புக‌ள் க‌லெக்ட‌ரை ச‌ந்திப்ப‌து என‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்டு இன்று க‌லெக்ட‌ரை ச‌ந்தித்து முறையிட‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து அத‌ன் ப‌டி நக‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா,துணை சேர்ம‌ன் ஹாஜாமுகைதீன் உள்ளிட்ட‌ ந‌க‌ராட்சியின் ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள்,ஜ‌மாத்க‌ள்,ம‌ற்றும் ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ள் உள்ளிட்டோர் க‌லெக்ட‌ரை ச‌ந்தித்த‌ன‌ர்.

க‌லெக்ட‌ரிட‌ம் குப்பை கிட‌ங்கு க‌ட்டுவ‌த‌ற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் ப‌டி கோரிக்கை விடுத்த‌ன‌ர்.இத‌ற்கு ப‌தில‌ளித்த‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் ஒரு வார‌த்தில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ ப‌தில‌ளித்தார்.

இது குறித்து க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

முத‌லில் கலெக்டரை ச‌ந்திக்க‌ முன் அனும‌தி பெற‌வில்லை இதனால் ச‌ந்திக்க‌ முடியாது என‌ ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து.பின்ன‌ர் நானும் க‌லெக்ட‌ரின் செல்போன் அலைபேசியில் நேரடியாக‌ தொட‌ர்பு கொண்டு அனும‌தி கேட்டேன் சந்திக்க முடியாது என ம‌றுத்து விட்டார்.பின்ன‌ர் பிர‌ச்ச‌னையின் வீரிய‌த்தை உரியவர்கள் மூலம் எடுத்துரைத்து அனும‌தி பெற்ற‌ன‌ர்.நிச்ச‌ய‌ம் கலெக்டர் கீழ‌க்க‌ரை ம‌க்க‌ளின் பிரச்ச‌னையை புரிந்து கொண்டு ந‌ட‌வ‌டிக்கை எடுப்பார் என்று ந‌ம்புகிறேன்.இப்பிரச்சனையில் கீழ‌க்க‌ரையில் அனைவ‌ரும் ஒற்றுமையாக‌ ஒருங்கிணைந்து செய‌ல்ப‌ட்டு பிர‌ச்ச‌னையை தீர்ப்போம்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 3, 2012 at 10:49 PM

    மாவட்ட ஆட்சியர் அவர்கள் நமது ஊர் பிரதிநிதிகளைச் சந்திக்கவே மறுத்துள்ளார். முன் அறிவிப்பு இன்றி சென்று இருந்தாலும் கூட வந்திருப்பவர்கள் யார்? வந்ததின் நோக்கம் முதலான் விவரங்களை அவரின் உதவியாளர் மூலம் நிச்சயமாக அறிந்திருக்கக்கூடும். சிபாரிசு இல்லாமல் கௌரவமாக சந்தித்திருக்கலாம். இருப்பினும் நமது நகர் பிரதிநிதிகள் விடா முயற்சியாக முயன்று சந்தித்து கோரிக்கையை சமர்பித்து விட்டு வ்ந்திருக்கிறார்கள். முழுமையான பாரட்டுக்குறியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    இந்த நேரத்தில் அன்பான வேண்டுகோள்.ஒரு வாரம் கழித்த பின் முறையான நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியரை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு எடுத்த காரியத்தை சாதிக்க வேண்டுகிறேம்.

    நமது ஊரை பொருத்தவரையில் ஆட்சிகள் மாறினாலும் கோலங்கள் என்ன காரணத்தினாலோ மாறவே மாட்டேன் என்கிறது. அரசு அதிகாரிகளுக்கு கீழக்கரை என்றாலே வேப்பங்காயாக கசக்கிற்து. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கீழக்கரைக்கு தாலுகா அந்தஸ்து தீர்மானமும் கிடைப்பிலேயே உள்ளது. இதனால் சமீப காலங்களில் திருமணம் ஆன குடும்பங்கள் புதிய ரேஷன் கார்டு வாங்க இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்தும் கிடைக்காததால் எரிவாயுக்கும் பதிய முடியாமல் அல்லல் படுகிறார்கள். இது போன்ற காரியங்களுக்கு ஊரில் தாலுகா அலுவலகம் இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க இறைவன் கருணை காட்டுவானா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.