Saturday, July 7, 2012

கீழக்கரையில் நூற்றுக்கணக்கானோருக்கு இலவச கண் சிகிச்சை !


கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்க‌
ரோட்டரி சங்கம் கீழக்கரை, சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை, கீழக்கரை நகர் மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்ற சங்கம் ,கீழக்கரையில் இராமேஸ்வரம் சங்கர நேத்ராலயா மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (07.07.2012) கிழக்குத் தெருவிலுள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் நடை பெற்றது.
பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

இந்த இலவச முகாம் நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில் நடைபெற்றது கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் ,முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்அலாவுதீன் மருத்துவர் அல் அம்ரா, தங்கம் ராதா கிருஸ்னன்,அமானுல்லா ,இஸ்மாயில்,கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து முகாமின் மருத்துவக் குழுவின் தலைவர் சச்சின் மால்வியா கூறியதாவது,
கண் புரைக்கான அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒன்பது பேர்களை எங்களுடன் அழைத்து செல்கிறோம்.

இவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பும் வரை உள்ள அனைத்து செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். இது போன்ற இலவச முகாம்களை, அனைத்து சமுதாய ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் வண்ணம் நடத்த அனைத்து பொது நல அமைப்புகளும் முன் வர வேண்டும் என்ர்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 7, 2012 at 7:21 PM

    நமது நகரில் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் தொடக்கம் முதலே தன்னலமற்ற சேவையியினால் நாளுக்கு நாள் பிரகாசித்துக் கொண்டு வருகிறது. இதய கனிந்த பாரட்டுக்குரியவர்கள்.

    மேலும் அதன் அமைவிடம் எந்த நேரத்திலும் பெண்கள் உட்பட பாதுகாப்பாக வந்து செல்ல வசதியாக உள்ளது. குறிப்பாக குடி இருப்பு பகுதியின் நடுவே அமையப் பெற்றுள்ளது. மேலும் நகரின் கிழக்கு கடைக் கோடியில் உள்ள மக்களுக்கு வைத்திய வசதி கிடைக்க வாய்ப்பாக அமையப் பெற்றுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் நகரில் நாற்பது வயதிற்கு மேல் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என பேதம் இல்லாமல் மூட்டு வியாதி, இருதய வியாதி, புற்று நோய் என உயிர் கொல்லி வியாதிகள் பரவலாக தாக்கி இருக்கிறது. தாக்கி வருகிறது. வல்ல நாயன் நம் அனைவரையும் காத்து இரட்சிப்பானாக ஆமீன்.

    இது சமயம் தக்க தருணத்தில் எல்லா மக்களும் பயன் அடையும் விதமாக ஆரம்பிக்கப் பட்டுள்ள கீழக்கரை மெடிக்கல் மிஷன் மேன் மேலும் செழித்து வளர ஊர் மக்கள் அனைவரும் ஆதரவு அளித்து சிறப்பிப்போமாக.

    மேலும் அங்கு எழுதப்படும் மருந்து களுக்கு அங்கேயே இருக்கும் மருந்துக் கடையில் பத்து சதவீதம் தள்ளுபடியும் உண்டு.

    பலவிதமான சிறப்பு வைத்தியர்களும் வருகை தருவதால் வைத்திய ஆலோசனைக்கு இராமநாதபுரம் சென்று வரக் கூடிய வாகனச் செலவு மிச்சமாகிறது. அதன் அமைவிடம் காரணமாக முன் இரவில் பெண்கள் கூட ஆண் துணை இல்லாமல் சென்று வரலாம் என்பது அதன் சிறப்பு அம்சம்.

    வாழ்க வளர்க.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.