Tuesday, July 10, 2012
கீழக்கரையில் மர்ம மனிதர்கள் நடமாட்டம்!திருடர்களா? பொதுமக்கள் புகார்!
கீழக்கரையில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் உள்ள பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி வருவதாகவும்,திருடர்களாக இருக்கலாம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது கீழக்கரை சேர்ந்த செய்யது ஹுசைன் கூறியதாவது,
நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புதுத்தெரு,ஜாமியா நகர் பகுதி மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலை செல்லும் வழியில் வீடுகள் உள்ள பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர்.இவர்களை கண்ட நம் பகுதியில் உள்ள இளைஞர்கள் சத்தட்டமிட்டவுடன் முள்ளுவாடி செல்லும் சாலை வழியே ஓடி தப்பி விட்டனர்.திருடர்களாக இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அச்சத்தை போக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
சமீப காலத்தில் நமது நகருக்கு வீடு கட்டுமான பணி நிமித்தமாக அநேகர் வருகை தந்துள்ளனர் என்படஹி கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteசைல காலத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 303 சுனாமி வீடுகள் ஒப்பந்த அடிப்படையில்கட்டி கொடுத்த ஒரு சர்வ தேச கட்டுமான நிர்வாகத்தில் ஒருக்கிணைப்பாளராக பணியில் இருந்த போது அங்கும் இது போன்ற பிரச்சனை எழுந்தது.அது சமயம் அம்மாவட்ட எஸ்.பி. அவர்கள் அம்மாவட்டதிலுள்ள கூடுமான வரை அனைத்து கட்டுமான நிர்வாகத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி அதில் வெளி மாநில ஆட்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள் அவர்கள் சமபந்தப்பட்ட முழுத் தகவல்களையும் போட்டோ உட்பட பாதுகாத்து வைக்க வேண்டுகோள் விடுத்தார்கள்.
இது போன்று நமது ஊரிலும் நடவடிக்கை மேற் கொள்ளலாம். சில நிர்வாக சிக்கல் இருந்தாலும் கூடிப் பேசி நடைமுறை படுத்தினால் பிரச்சனை கட்டு பாட்டுக்குள் வரும். பணிஆட்களும் தவறு செய்ய நினைப்பதை விட்டு வந்த பணியை மட்டும் செய்ய பிரகாசமன வாய்ப்புண்டு.
வரும் முன் காப்போம்.
இவர்களெல்லாம் தீவிரவாதிகள் இல்லையா
ReplyDeleteகருக்குமட்டையோட சில சகோதரர்களை இரவில் நிறுத்திவைத்தால் சரியாகிவிடும்
ReplyDelete