Thursday, July 19, 2012

நகராட்சி மண்டல இயக்குநர் நடவடிக்கை!கீழக்கரை கடற்கரை சுத்த‌மாகிற‌து !




நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கீழக்கரைக்கு திடீர் வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் கடற்கரை சென்ற அவர் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மண் அள்ளும் எந்திரம்(ஜெசிபி), லாரி வரவ‌ழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் புதிதாக கட்டப்படும் உரக்கிடங்கு, தற்போது குப்பை கொட்டப்படும் தனியார் தோப்பு, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார். கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.



இதே போன்று தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நகரை சுத்தமாக்க அரசு உதவ‌ வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 19, 2012 at 8:55 PM

    சந்தோஷம் தரக் கூடிய செய்தியே.இதன் பிண்ணணிக்கு நாம் நன்றி பாராட்ட கடமைப் பட்டுள்ளோம்.

    கடந்த எட்டு மாதத்திற்கு மேலாக சமூகஆர்வலர்களும், பொது நல அமைப்புகளும் கரடியாக கத்திய போதிலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருந்த நகர் சுகாதாரம் கடந்த திங்கள் கிழமை (16/07/12) மற்றும செவ்வாய் கிழமை (17/07/12} அன்று ஜீ தமிழ் தொலைகாட்சியில் கீழக்கரை நகர் சுகாதாரம் பற்றிய ஒளிபரப்பு தான் மூலக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க நியாயம் இல்லை

    அதற்காக முயற்சி செய்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்று
    குப்பக்கரையின் அவல நிலைமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு கட்டி திரு. குபேந்திரனின் நாம் ஆவலுடன் எதிர் பார்ந்திருந்த நடவடிக்கைக்கு வித்திட்ட அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.