Saturday, July 28, 2012
விரைவில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவு துவக்கம்!
photo:- the hindu
படம் : திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் சைபர் கிரைம் பிரிவை கமிசனர் சைலேஷ்குமார் துவக்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சைபர்கிரைம் பிரிவு விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு சென்னையில் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில் குற்றங்களும் ஹைடெக் முறையில் அதிகரித்து வருகின்றன. போலீசாருக்கு சவாலாக விளங்கும் திருடர்கள் நவீன யுக்திகளை பயன்படுத்தி தினமும் புதுப்புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் போலி கிரடிட்கார்டு மோசடி, ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளின் பாஸ்வேர்டுகளை திருடி பண மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதள குற்றங்கள்,சமூக இனையதளம் மூலம் மிரட்டல்கள், அரசின் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு கொலைமிரட்டல் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் பெருகி வருகின்றன.
இவற்றை தடுப்பதற்காக சென்னை மற்றும் மண்டல அளவிலான போலீஸ் தலைமையகங்களில் சைபர் கிரைம் பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் இவ்வகையான குற்றங்கள் பெருகி வருவதால் இவற்றை தடுப்பது குறித்து மாநில அரசு, உள்துறை, போலீஸ் துறையினர் ஆலோசனை நடத்தினர். இதில் சைபர் கிரைம் பிரிவுகளை மாவட்ட அளவில் துவக்கிட முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சைபர் கிரைம் பிரிவை மாவட்ட தலைமை அலுவலகமான எஸ்பி அலுவலகத்தில் துவங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள போலீசாரில் பட்டம் பெற்ற, கம்ப்யூட்டரில் சிறப்பு படிப்புகள் படித்து அனுபவம் உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவிற்கு வரவிரும்பியவர்களுக்கு கடந்த வாரம் தேர்வு நடந்தது.
மாவட்டத்தில் ஒரு எஸ்ஐ, மூன்று போலீசார் வீதம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போலீசார் நேற்று பயிற்சிக்காக சென்னை சென்றுள்ளனர்.
சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரிகள் முன்னிலையில் முதற்கட்டமாக மூன்று நாட்கள் பயிற்சிபெற உள்ளனர்’, என்றார். இதன் படி விரைவில் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் இதன் பிரிவு துவக்கப்படும் என்று தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
www.idzmo.com
ReplyDeleteஇது மட்டும் காணாது. கீழக்கரை பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக செயல் படுத்தாமல் இருக்கும் அழைப்போர் விவரம் ( CALLER ID)வசதியை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்று வரைக்கும் பல வீடுகளில் இரவு 12 மணிக்கு மேல் அநோமதய அழைப்புகள் வ்ந்த் கொண்டுதான் இருக்கின்றன. இதன் விவரம் அறிய பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை நாடினால் காவ்ல் துறையில் சொல்லி முதல் தகவல் அறிக்கையின் நகலை கொணடுட வாருங்கள் என்கிறர்கள்.
ReplyDeleteநகரின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அனேக வீடுகளில் ஆண்கள் சம்பாத்தியம் நிமித்தமாக வெளியூரில் உள்ளனர். நெருக்கமான வீட்டு அமைப்புதான் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு.ஆகவே பெண்கள் காவல் துறை சென்று அறிக்கை நகல் வாங்கி சமர்பிப்பது என்பது அரிதான செயலாகும்.
பி.ஏன்.எல் நிர்வாகத்தில் கிடைக்கக்கூடிய பதில்: அலுவலத்தில் இந்த வசதியை செய்து கொடுக்கக் கூடிய நபர் இல்லை. காரைக்குடி அலுவலகத்தில்தான் உள்ளார்.
நமது கேள்வி:இது சம்பந்தமாக அனேக மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த் சம்பந்தப் பட்ட நபரை வாரத்தில் ஒரு முறையோ குறைந்த பட்சம் மாதத்தில் ஒரு முறையோ வருகை தந்து பொது மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய நிர்வாகம் ஏற்பாடு செய்யலாமே. மனம் இருந்தால்........ ஏனென்றால் ஒரே நாளில் வந்து செல்லக்கூடிய தூரத்தில்தான் உள்ளது. அது லண்டனில் இல்லை.