Monday, July 16, 2012
கீழக்கரையில் மர்ம காய்ச்சலுக்கு ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்தது!
கீழக்கரையில் நிலவி வரும் சுகாதார கேடினால் மலேரியா,டைபாய்டு,டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல்களால் பலரும் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கீழக்கரை தெற்குதெருவை சேர்ந்த அப்துல் வாஹிதுவின் ஒன்றரை மாத குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது.இச்செய்தி அப்பகுதி மக்களிடையை மிகுந்த வருத்தத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் கீழக்கரையில் வேகமாக பரவி பலரும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் அரசு தரப்பில் இருந்து காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.உடனடியாக அரசு தரப்பு விரைந்து செயல்பட்டு கீழக்கரை முழுவதும் தெரு வாரியாக மருத்து குழுவை அமைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
ReplyDelete89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28 ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29 فَادْخُلِي فِي عِبَادِي
89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30 وَادْخُلِي جَنَّتِي
89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).