Tuesday, July 24, 2012

"குப்பைக்கு குட்பை" சொல்ல களமிறங்கிய கைராத்துல் ஜலாலியா பள்ளி மாணவிகள் !



கீழக்கரை கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் சார்பில் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார சீர்கேட்டை அகற்றவும் வலியுறுத்தி பேரணி மற்றும் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.இப்பேரணிக்கு பள்ளியின் தாளாளர் சாதிக் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் முகம்மது மீரா முன்னிலை வகித்தார்.

"விடுத‌லை/விடுத‌லை/நோயிலிருந்து விடுத‌லை " 'குப்பைக்கு குட்பை கொடுப்போம்" "குப்பைக‌ரையாகும் கீழ‌க்க‌ரையை மீட்போம்"

உள்ளிட்ட‌ ப‌ல்வேறு வாச‌க‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ப‌தாகைக‌ளை ஏந்திய‌ மாண‌விக‌ள் ஊர்வ‌ல‌மாக‌ சென்றதோடு முக்கிய‌ இட‌ங்க‌ளில் தெருமுனை பிர‌ச்சார‌ம் செய்த‌ன‌ர். செல்லும் வழியிலுள்ள‌ வீடுக‌ளில் சுகாதார‌ம் குறித்த‌ விழிப்புண‌வு க‌ருத்துகளை விள‌க்கி கூறின‌ர்

இதில் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள் ப‌த்மாவ‌தி,சாபிரா பேக‌ம்,ரேனுகா தேவி, ப‌ர‌மேஸ்வ‌ரி,ஆர்த்தி, ம‌ற்றும் அலுவ‌ல‌ர் அபுதாகிர் உள்ளிட்ட‌ பல‌ர் உட‌ன் சென்ற‌ன‌ர்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 25, 2012 at 12:57 PM

    நல்லதொரு காரியத்தையே அறங்கேற்றி இருக்கிறர்கள். மனமார்ந்த பாரட்டுக்கள்.

    குப்பைக்கரையின் இன்றைய தலையாய பிரச்சனை குப்பை தான் என்பதில் மாற்று கருத்து இருக்க நியாயம் இல்லை.

    செயல் இழந்து போன ஊர் நிர்வாகம் இருக்கக்கூடிய இன்றைய காலக்கட்டத்தில் மாணவச் செல்வங்களினால் விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் நடத்தப்பட்ட காரியம் வரவேற்கத் தக்கது.பள்ளித் தாளாளருக்கும், நிர்வாகத்திற்கும் நன்றி கூற ஊர் கடமைப் பட்டிருக்கிறது.

    இருப்பினும் சிறிய மனக்குறை. இதையே, ஒரு நாள் குறிப்பிட்டு நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவச் செல்வங்கள் கலந்து, அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் (முதல் குடி மகள், ஆணையர் (பொறுப்பு ஊட்பட) வெடகி வீட்டில் ஒளிந்து கொள்ளும் வண்ணம் பிரமாண்டப் படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    காலம் கனிந்து வரும். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமலா போய் விடும்?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.