Wednesday, July 11, 2012

துணை சேர்மன் சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் துப்புரவு பணி


கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் க‌ழிவுநீர் கால்வாய்க‌ளில் குப்பைக‌ள் அடைத்து கொண்டி க‌ழிவு நீர் சீராக‌ ஓடாம‌ல் தேங்கி நிற்கிற‌து. இத‌னால் அப்பகுகளில் சுகாதார கேடு உண்டாகி அப்பகுதியில் உள்ள‌ வீடுக‌ளில் உள்ளோர் ப‌ல்வேறு நோய்க‌ளுக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து.

இந்நிலையில் நகராட்சியின் துணை தலைவர் ஹாஜா முகைதீன் த‌ன‌து வார்டு ப‌குதியில் தன்னுடைய சொந்த‌ செல‌வில் க‌ழிவு நீர் கால்வாய்க‌ளில் குப்பைக‌ளை அப்புற‌ப்ப‌டுத்தி சீர் செய்துள்ளார்.

இது குறித்து துணை சேர்ம‌ன் ஹாஜா முகைதீன் கூறிய‌தாவது,

குப்பைகளால் கழிவு நீர் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் வழிந்தொடும் சூழ்நிலை ஏற்பட்ட‌து.நகராட்சி தலைவரிடம் இது குறித்து புகார் தெரிவித்தேன் எவ்வித நடவடிக்கையும் இல்லை.துப்புரவு பணியாளர்களிடம் சுத்தம் செய்ய வருமாறு நானே அழைத்தேன் யாரும் வரவில்லை.எனவேதான் இப்பகுதி மக்களின் நலன் கருதி என் சொந்த செலவில் துப்புரவு பணியை மேற்கொண்டேன் என்றார்.

2 comments:

  1. என்ன கொடுமைடா இது!!! என்னதான் நடக்கிறது நமதூர் நகராட்சி நிர்வாகத்தில். இதில் சேர்மனும் துணை சேர்மனும் ஒரே கட்சியை . சார்ந்தவர்கள்.அதிலும் ஆளும் கட்சி. இப்படி செயல் பட்டால் நகர் நலம் உருப்படுமா?
    அப்படி என்னதான் பிரச்சனை அவர்களுக்குள்?

    இக்கட்டான தருணத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் சில அமைப்புகள் சால்வை போர்த்தி பாராட்டி வாழ்த்த்கினார்களே. இவர்கள் இப்படி சச்சரவு செய்து கொள்ளத்தானா. இதற்கு தீர்வு இதுவாகத்தான் இருக்க முடியும்.

    ஏதாவது பொது நல அமைப்பு ஒன்று அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் ஊர் நலனுக்காக ஒன்று கூட்டி சமரசம் செய்தாக வேண்டும். வேறு வழி தெரியவில்லை.

    இவர்கள் பதவி ஏற்றப் பிறகு மக்கள் நல திட்டங்களுக்காக கோடிக்கணக்கான தொகை மக்களின் வரி பணத்திலிருந்து அரசால் ஒதுக்கப் பட்டுள்ளது. இருந்தும் மக்களுக்கு யாது பயனும் இல்லை. முடை நாற்றம் போல ஊழல் மலிந்துள்ளது. மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்காக அரசு சாட்டையை சுழற்றுவதற்கு முன்னால் இவர்கள் தன்னை மாற்றிக் கொள்வது நலமாக அமையும். நீரோ மன்னன பிடில் வாசித்த கதையாக இருக்கிறது இவர்களின் செயல்பாடுகள்.

    அந்தோ பரிதாபத்திற்கு உரியவர்கள் நகர் மக்கள்.

    ReplyDelete
  2. "நகராட்சி தலைவரிடம் இது குறித்து புகார் தெரிவித்தேன் எவ்வித நடவடிக்கையும் இல்லை.துப்புரவு பணியாளர்களிடம் சுத்தம் செய்ய வருமாறு நானே அழைத்தேன் யாரும் வரவில்லை"

    துணை சேர்மனுக்கும் அவரோட வார்டுக்குமே இந்த மாதிரி RESPONSE என்று சொன்னால், மற்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அவர்களின் கோரிக்கைகளின் நிலை......? பொதுநல நோக்கோடு யாவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அல்ஹம்துலில்லாஹ் வெற்றி நமதே! NO DOUBT ..... சிந்திப்போம் செயல்படுவோம் ....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.