
கீழக்கரை செய்யது ஹமீதா அரபி கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.10 மாணவர்களுக்கு ஆலிம் பட்டம் வழங்கப்பட்டது.இவர்கள் ஆலிம் பட்டத்தோடு சதக் பாலிடக்னிக் கல்லூரியில் இன் ஜினியரிங் டிப்ளமா படிப்பை முடித்துள்ளது குறிப்பிடதக்கது.
இதில் சிறப்பு விருந்தினராக மொளலான அப்துல் ஹமீது பாகவி,சென்னை புதுக்கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் மாலிக், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
சதக் டிரஸ்டின் தலைவர் ஹமீது அப்துல் காதர் பேசியதாவது,
இந்தியாவிலேயே இன்ஜினியரிங் படித்து கொண்டே அரபி கல்லூரியில் படித்து பட்டம் பெறலாம் என்ற வசதி இங்கு மட்டும் தான் என்பதை தெரியபடுத்துகிறேன் என்றார்.
கல்லூரி இயக்குநர் யூசுப் சாகிப் கூறுகையில் , தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து அரபி கல்லூரிகளையும் ஒருங்கினைத்து அரபி பல்கலைகழகம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சதக் டிரஸ்ட் சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.
நிகழ்ச்சியில் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் உள்ளிட்ட கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.