Monday, July 2, 2012

நடுத்தெருவில் நடைபெற்ற ஜமாத்கள்,சமூகநல அமைப்புகளின் கூட்டத்தில் கலெக்டரை சந்திக்க முடிவு !


கீழக்கரை நகராட்சியின் தில்லையேந்தல் குப்பை கிடங்கை இரவோடு,இரவாக சமூக விரோதிகள் இடித்ததை தொடந்து அது சம்பந்தமாக‌ நடுத்தெரு ஜீம்மா பள்ளி அலுவலகத்தில் ஜமாத்கள் ,சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கு பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை சேர்மன் ஹாஜா முகைதீன்,நடுத்தெரு ஜமாத்,வடக்குத்தெரு ஜமாத்,தெற்கு தெரு ஜமாத்,கடற்கரை பள்ளி ஜமாத்,மின்ஹாஜியார் பள்ளி ஜமாத், மற்றும் பழைய குத்பா பள்ளி ஜமாத் உள்ளிட்ட ஜமாத் பிரதிநிதிகளும்,

சமூக பொது நல அமைப்புகளான மக்கள் நல பாதுகாப்பு கழகம்,நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம்,சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம்,மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம்,18வாலிபர்கள் தர்ஹா நிர்வாக சபை உள்ளிட்டவைகளும் மற்றும் கவுன்சிலர்கள் சுரேஷ்,சாகுல் ஹமீது, அன்வர் அலி,செய்யது கருணை,சித்தீக் அலி,ரபீயுதீன்,முகம்மது மஜீதா பேகம் ,முகைதீன் காதர் சாகிபு,முகைதீன் இப்ராகிம்,இடி மின்னல் ஹாஜா நஜிமுதீன்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

கூட்டத்தின் முடிவில் அனைவரும் செவ்வாய் காலை கலெக்டரை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

6 comments:

  1. செம்பிநகர் சுனாமிJuly 2, 2012 at 9:38 PM

    தில்லையேநதல் பஞ்சாயத்தையும் சேர்த்து கீழக்கரை நகராட்சி எல்லையை விரிவு படுத்தி ” எ “ கிரேடு நகராட்சியாக மாறாத வரைக்கும் இநத பிரச்சனை ஓயப் போவதிலலை. காரணம் புழுத்துப் போன அரசியல்.

    ReplyDelete
  2. செம்பிநகர் சுனாமிJuly 3, 2012 at 6:44 PM

    மேலும் தில்லையேந்தல் பஞ்சாயத்திக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் குடி இருப்போர் அனைவரும் கீழக்கரை அனைத்து ஜாமாத் வாசிகளே.

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 3, 2012 at 7:59 PM

    வேதனை மேல் வேதனை. சோதனை மேல் சோதனை.அனைத்து ஜமாத் பெரு மக்களும், அனேக சமூக பொது நல அமைப்புகளும் கலந்து கொண்ட கூட்டத்தை மக்களே கவனித்தீர்களா ??? விரல் விட்டு எண்ணி விடலாம் தானே. இப்படி நகர் நலனில் அக்கரை காட்டாத அமைப்புகளால் நகருக்கு என்ன பயன்? மக்கள் பிரதிநிதி களோ இருபத்தி ஒன்று பேர்!!! ஒவ்வொரு ஜமாத்லிலும் கை எண்ணிக்கையில் அடங்காத உறுப்பினர்கள். இதில் சமூக நல பொது அமைப்புகள் அங்கத்தினர்கள் வேறு.

    கொடுமை , கொடுமையிலும் கொடுமை. இப்படி இருந்தால், சில தினங்களுக்கு முன் கீழக்கரை டைம்ஸில் பதிவாகி இருந்ததே அதாவது சில தினங்களுக்கு முன் நகருக்கு வருகை தந்த நமது மாவட்ட ஆட்சி திரு.நந்த குமாரிடம் ஒரு மக்கள் பிரதிநிதி முறையிட்டாரே நமது நகராட்சியின் ஆணையரை(பொருப்பு)பற்றி.

    நாம் இப்படி இருந்தால் அந்த ஆணையர் (பொருப்பு)இப்படிதான் திணவேடுத்து பேசுவார்.

    காலம் தான் இதற்கெல்லாம் ஒருமுடிவு கட்ட வேண்டும். ந்ம்பிக்கையுடன் காத்திருப்போம். நம்பிக்கைதானே வாழ்வின் ஆதாரம் எனபது மூத்தோர் மெய் வாக்கு

    ReplyDelete
  4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 3, 2012 at 10:04 PM

    அந்த மக்கள் பிரதிநிதி மக்கள் சேவை இயக்கத்தை சார்ந்த சகோதரர். முஜிப் என மனதில் கொள்ளவும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.