Tuesday, July 24, 2012

வாரம் மூன்று முறை ராமேஸ்வ‌ர‌ம் - ஆந்திராவுக்கு ராமநாதபுரம் வழியாக ரயில் சேவை !


ப‌ட‌ம்:தின‌க‌ர‌ன்

மதுரையில் இருந்து திருப்பதிக்கு வாரம் இருமுறை ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தற்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் & திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இந்த ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது. புதிய ரயில் சேவையின் துவக்க விழா, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கோயல், உதவி கோட்ட மேலாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தனர். கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜ், எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமேஸ்வரம் & திருப்பதி ரயிலை மாலை 4 மணிக்கு அமைச்சர் சுந்தர்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் இந்த ரயில் இயங்கும்.

2 comments:

  1. Time Table
    Train No Train Name Date
    16780 RMM TPTY EXP 28- Jul- 2012
    Stn Code Stn Name Route No Arrival Departure Distance Day Remark
    RMM RAMESWARAM 1 - 16:00 0000 1
    MMM MANDAPAM 1 16:28 16:30 0018 1
    RMD RAMANATHAPURAM 1 16:58 17:00 0054 1
    PMK PARAMAKKUDI 1 17:28 17:30 0090 1
    MNM MANAMADURAI JN 1 18:00 18:05 0114 1
    MDU MADURAI JN 1 19:05 19:15 0161 1
    KQN KODAIKANAL ROAD 1 19:46 19:47 0202 1
    DG DINDIGUL JN 1 20:10 20:12 0227 1
    TPJ TIRUCHCHIRAPALI 1 22:00 22:10 0322 1
    TJ THANJAVUR 1 22:53 22:55 0372 1
    KMU KUMBAKONAM 1 23:29 23:30 0411 1
    MV MAYILADUTURAI J 1 00:03 00:05 0442 2
    SY SIRKAZHI 1 00:29 00:30 0462 2
    CDM CHIDAMBARAM 1 00:49 00:50 0479 2
    CUPJ CUDDALORE PORT 1 01:26 01:27 0517 2
    TDPR TIRUPADRIPULYUR 1 01:34 01:35 0521 2
    VM VILLUPARAM JN 1 02:45 02:50 0564 2
    TNM TIRUVANNAMALAI 1 04:34 04:35 0631 2
    VLR VELLORE CANT 1 06:29 06:30 0714 2
    KPD KATPADI JN 1 07:28 07:30 0724 2
    PAK PAKALA JN 1 09:14 09:15 0786 2
    TPTY TIRUPATI 1 10:35 - 0828 2

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 25, 2012 at 12:17 PM

    தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி.இதற்கான கூடுதல் தகவல்:

    திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு புகைவண்டி எண்: 16779.
    பயனிக்கும் நாள்கள் :ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
    பயண நேரம் :20 மணித்துளிகள்
    திருப்பதி புறப்படுதல் :பகல்1-15
    ராமேஸ்வரம் அடைதல்:காலை9.15அடுத்தநாள்

    ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு புகைவண்டி எண்: 16780
    பயனிக்கும் நாள் : திங்கள், வியாழன், சனி
    பயண நேரம் :18-35 மணித்துளிகள்
    ராமேஸ்வரம் புறப்படுதல்: மாலை 4.00
    திருப்பதி அடைதல் :காலை 10.35 அடுத்த நாள்

    பயணக் கட்டணம்:

    முதல் வகுப்பு ரூ.1,020
    ஏ.சி 2 டயர் ரூ.1,160
    ஏ.சி 3 டயர் ரூ.817
    2-ம் வகுப்பு படுக்கை வசதி ரூ.300
    பொது வகுப்பு ரூ.155

    நன்றியுடன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.