Sunday, July 29, 2012
கீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை!
www.keelakaraitimes.com
சென்னையில் பள்ளி சிறுமி ஸ்ருதி பள்ளி வாகன ஓட்டையிலிருந்து விழுந்து உயிரழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வாகனங்களை மட்டுமே ஆய்வு செய்யப்படும் நிலையில் கீழக்கரையில் பள்ளி வாகனங்களை விட தனியார் வாடகை வாகனங்கள் தான் குழந்தைகளை அதிக அளவில் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.எனவே தனியார் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர் முசம்மில் கூறுகையில்,
கீழக்கரையில் அதிக அளவில் ஆம்னி வாகனங்களில் பள்ளி குழந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்றனர்.இவற்றில் பல வாடகைக்கு இயக்க முறையான அனுமதி பெறவில்லை மேலும் சிலருக்கு இதில் ஓட்டுநர் லைசென்ஸ் இல்லை.கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் பள்ளி குழந்தைகளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்றனர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது மேலும் தெருக்களிலும்,வளைவுகளிலும் அசுர வேகத்தில் செலவதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.எனவே அரசு அதிகாரிகள் பள்ளி வாகனங்களை மட்டும் ஆய்வு செய்வதோடு நிறுத்தி விடாமல் தனியார் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி நாட்களில் காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணி வரை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
பரிதாபத்திற்கரிய சிறுமி ஸ்ருதியின் அகால மரணத்தை ஒட்டி முன்னால் தமிழக ஐ.எ.எஸ், அதிகாரி கூறியதாவது: அரசு துறைகளில் எல்லாமே சடங்காகத்தான் நடக்கின்றன. பிரச்சனைகளை தீர்க்க முழு ஈடுபாட்டுடன் தொடர் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இனிமேலாவது மாவட்ட ஆட்சியாளர்களின் தலைமையில் போக்குவரத்து, கல்வி துறை, காவல் துறை, மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.(தினமலர் 27/07/12 ம்துரை பதிப்பு)
ReplyDeleteஅரசு நிர்வாகம் கோமாளித்தனமாகி போய் விட்ட இன்றைய காலக் கட்டத்தில் எங்கும் எதிலும் லஞ்ச லாவண்ணியம், மக்களுக்கு அத்தியாவசியமான தெரு விளக்கு, குடிநீர் குழாய் முதலான வற்றில் கூட விவஸ்தை கெட்டதனமாக செயல்படும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மனம் திருந்தாத வரை எதுவும் மக்களுக்கு பயன் அளிக்கப் போவதில்லை. சில ஆண்டு களுக்கு முன் குமபகோணத்த்ல் கரிகட்டையாய் போன இளஞ் பிஞ்சுகளின் வழக்கு என்னவாயிற்று? இது போல கணக்கில் அடங்காத அளவிற்கு சொல்லி கொண்டே போகலம்.
சில காலத்திற்கு முன் வாடகை மற்றும் த்னியார் மகிழுந்துகளில் பக்க வாட்டு கணணாடிகளில் ஒட்டப்பட்ட கருமை நிற ஒட்டிகளை நீக்கச் சொன்னார்கள். அது நடைமுறையில் இப்போது எப்படி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இப்போது கூட பள்ளி வாகனங்கள் மீது எடுக்குப்படும் நடவடிக்கை கூட கண்துடைப்பே. உயர்நீதி மன்ற நீதிபதி மரியாதைக்குரிய எம்.ஒய். இக்பால் அவ்ர்கள் யாருடை முறையீடும் இல்லாமல் தானாக முன் வந்து நடவடிக்கையை துரிதப் படுத்தியதால் ஏதோ இப்போது இது பற்றி பேசப்படுகிறது. அதுவும் அடுத்த கொடூரமான் பாதிப்பு நிகழும் வரைதான்.
சில காலங்களுக்கு முன் நமக்கு அருகில் உள்ள ஏர்வாடியில் மன நலம் குன்றியவர்கள் சிலர் பேராசை காரர்களின் கொடூர எண்ணத்தால் கரிக்கட்டையாகி போன சம்பவம் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.அப்போதுகூட உச்ச நீதி மன்ற நீதிஅரசர் மரியாதைக்குரிய மார்கண்டேய கட்சூ அவர்கள் யாரும் முறை இடாத நிலையில் பத்திரிக்கையில் வநத செய்தியின் அடிப்படையில் தானாக முன் வந்து சாட்டையை சுழற்றினார்கள்.அதன் அடிப்படையில் சிகிச்சைக்காக ஏர்வாடிக்கு வரும் மனம் நலம் குன்றியவர்களை பாதுகாக்க சில சட்ட நடைமுறைக்ளை கொண்டு வந்தார்கள். பழைய குருடி கதவை திறடி என்ற சொலவடைக்கு ஏற்ப இன்று எப்படி செயல்படுகிறது என்பதை நாம் கண்கூடாக் காண்கிறோம்.
ஆக சட்டத்தின் பாதுகாவலர்கள் தான் வணங்கும் இறைவனுக்கு அஞ்சி லஞ்ச வாவண்ணியத்திலிருந்து முடிந்த அளவு விடுபட்டு செயல் பட்டால் ஒழிய மக்களுக்கு விமோசனம் இல்லை.