Tuesday, July 31, 2012
கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு புதிய உபகரணங்களுடன் பெண் மருத்துவரும் நியமனம்!
பட விளக்கம்:- சென்ற ஜனவரி மாதம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் சுந்தர்ராஜன் வருகை தந்து ஆய்வு செய்தார்.அப்போது அளித்த பேட்டியில் பெண் மருத்துவர் விரைவில் நியமிக்கப்படுவார் என அறிவித்திருந்தார்.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக பெண் மருத்துவர் இல்லை என்ற நிலை இருந்து வந்தது கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளோர் பிரசவம் உள்ளிட்டவைகளுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறும் சூழ்நிலை நிலவியது.
இதனால் நீண்டகாலமாக பெண் டாக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.பல்வேறு தரப்பினரும் இதற்காக முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற அதிமுக அரசு கீழக்கரைக்கு பெண் டாக்டரை நியமித்துள்ளத்து.இதன் இப்பகுதியில் உள்ள தாய்மார்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கான சிகிச்சையை பெற்று கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை அரசு தலைமை மருத்துவர் ராஜ்மோகன் கூறியதாவது,
கீழக்கரை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய அரசானது பிரசவம் பார்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்(ஸ்கேன்) உள்பட அனைத்தையும் கீழக்கரை மருத்துவமனைக்கு வழங்கியதுடன் பெண் மருத்துவர்(முத்தமிழரசி) ஒருவரையும் நியமனம் செய்துள்ளது.மேலும் குழந்தைகள் மருத்துவர்கள் இருவரை நியமனம் செய்துள்ளது.
கீழக்கரை,மாயகுளம்,ஏர்வாடி,காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களில் தேவையானவர் இங்குள்ள மருத்துவ வசதிகளை பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் பிரசவத்திற்கு அவசர உதவிக்கு 04567 - 244551 என்ற எண்னில் தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின் போது மருத்துவர்கள் அசின்,ஜவாஹிர் ஹுசைன்,முத்தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.
ஜனவரி மாதம் அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனை வந்திருந்த போது விரைவில் பெண் மருத்துவர் நியமிக்கபடுவார் என அறிவித்தார் அதன் படி நியமனம் செய்யப்படுள்ளது குறிப்பிடதக்கது பார்க்க செய்தி :-http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_10.html
நீண்ட கால கோரிக்கையான பெண் மருத்துவ நியமனத்திற்க்காக முயற்சித்த அனைவருக்கும் நியமனம் செய்த தமிழக அரசிற்கும் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் நெய்னார் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
என்ன ஆயிற்று கீழை மாநகருக்கு? ஜீ தமிழ் தொலைகாட்சி ஒளிபரப்பின் பயனா?
ReplyDeleteஇன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர நக்ராட்சி ஆணையர் நியமனம்,
அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்களுடன் (ஸ்கேன் உட்பட) பெண் மருத்துவர் நியமனம்,
தெரு விளக்கு வாங்கி அமைப்பதில் நடத்த திட்டமிடப்பட்ட பல இலட்ச ஊழல் தடுக்கும் வகையில் அந்த ஏலத்தை ரத்து செய்தது
எது எப்படி இருப்பினும் நகர மக்களுக்கு பயன் தருமானால், நன்மை பயக்குமானால் அதற்காக உழைத்த, பாடுபட்ட உயர்ந்த நல் உள்ளங்களை இதய பூர்வமாக வாழ்த்துகிறோம்.வரவேற்கிறோம். மக்களுக்கான மற்ற பணிகளும் இது போல நட்கக வேண்டுக்றோம்.