Thursday, July 5, 2012

கீழ‌க்க‌ரை தெருக்க‌ளில் இயற்கை எரிவாயு குறித்த சோதனை ? பொது ம‌க்க‌ள் அச்ச‌ம் !


கீழக்கரை தெற்கு தெரு ,நடுத் தெரு ,கடற்கரையோர பகுதி என்று வீடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளிட்ட‌ பகுதிகளில் ONGC நிறுவனம் சார்பில் இயற்கை எரிவாயு தொடர்பான சோதனை என்று கூறி உபகரணங்களை மண்ணில் புதைத்து சோதனை செய்கின்றனர்.

இது குறித்து தெற்கு தெரு ஜாமியா ந‌க‌ர் ப‌குதியில் சோத‌னை செய்து கொண்டிருந்த‌ ஓஎன் ஜிசிசியின் மேற்ப்பார்வையாள‌ர் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ரிடம் அப்பகுதியை சேர்ந்த ஹனீப் சூபியான் உள்ளிட்ட‌ இளைஞர்கள் கேட்ட‌ போது , அவர் கூறியதாவது ,

கீழக்கரையிலிருந்து முள்ளுவாடி செல்லும் வழியில் அமைந்துள்ள தோட்ட பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் குண்டு வைத்து எரிவாயு இருகிறதா என்று சோதனை நடத்தபடுகிறது ,
இதனால் மக்களுக்கு எந்த வித ஆபத்தும் நிகழாது என்று கூறினர் ,இந்த குண்டு வைக்கும் போது ஊரினுள் நிலம் அதிர வாய்ப்பு உள்ளதா என்றும் இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தெருக்களில் சோதனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

மேலும் அவ‌ரிட‌ம் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியிட‌ன் அனும‌தி பெற்றுள்ளீர்க‌ளா என்று கேட்ட‌ போது ந‌க‌ராட்சியிட‌ம் அனும‌தி பெற‌ தேவையில்லை என்றும் க‌லெக்ட‌ரிடம் இத‌ற்கான‌ அனும‌தி ப‌டிவத்தை கொடுத்துள்ளோம் அங்கிருந்து நக‌ராட்சிக்கு தெரிய‌ப்ப‌டுத்துவ‌ர்க‌ள் என்று கூறினார்.

இது குறித்து கீழ‌க்க‌ரை ந‌கராட்சி த‌ர‌ப்பில் கேட்ட‌ போது,

இது குறித்து த‌க‌வ‌ல் எதுவும் வ‌ரவில்லை என்று கூற‌ப்ப‌ட்ட‌து.


இது குறித்து அப்ப‌குதி க‌வுன்சில‌ர் ஆனா மூனா என்ற காதர் சாகிபு கூறிய‌தாவ‌து,


சோதனை நடத்தப்படும் பகுதியில் உள்ள‌ மக்கள் தங்கள் பகுதிகளில் சோதனை நடத்தப்படுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்றும் மேலும் இங்கு எரிவாயு கிடைப்பதாக உறுதி செய்யப்பட்டால் வீட்டை அரசு காலிசெய்ய சொல்லுவார்களோ என்று அச்சம‌டைந்துள்ள‌ன‌ர்.மேலும் சோதனை நடத்துபவர்கள் ONGC நிறுவனம் என்று சொல்கிறார்கள் அவர்கள்தானா அல்லது வேறு ஏதேனும் தனியார் நிறுவனமா? எதற்காக‌ சோதனை?என்றெல்லாம் ஏற்படும் குழப்பங்களுக்கும்,அச்சங்களுக்கும் தீர்வு ஏற்படுத்தி அர‌சு இதுகுறித்து உள்ளூர் ம‌க்க‌ளுக்கு தெளிவுப‌டுத்த‌ வேண்டும் என்றார்.

கீழக்கரையை சேர்ந்த கவிஞரும்,சமூக ஆர்வலருமான அஹமது அஸ்பாக் கூறியதாவது,

ONGC நிறுவனத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தப்படுவதாக அறிகின்றோம். அதுவும் நமது ஊரின் பிரதான, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, வீடுகள் நிறைந்த இடங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதாக கீழக்கரை டைம்ஸ் முலமாக அறிகின்றோம். நடு வீட்டில் குண்டு வைத்து ஆய்வுகள் செய்து, நாட்டை வளப்படுத்த அனுமதிக்க முடியாது. எனது வீடு எனக்கு சொந்தம். காட்டுக்குள் செய்ய வேண்டிய ஆய்வினை, நமது தெருவுக்குள், வீட்டுக்குள் ONGC செய்வது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும். மீண்டும் ஓர் கூடங்குளம் போல் கீழக்கரை அமைய ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


கூடங்குலத்தினர், தாமதமாக விழித்தனர்.....இன்னமும் திண்டாடுகின்றனர்.....நாம் விழிப்போடு இருப்போம், ஆவணங்கள் இல்லாமல், ஒருவன் குழி தோண்டினால், அந்த குழி அவனுக்கு...... ஊரை காப்போம் , நமது உடமைகளை காப்போம். " எனது வீடு............எனக்கு சொந்தம் "

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.