Saturday, July 14, 2012
கீழக்கரை பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் அமைக்க கோரிக்கை !
மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, ஹெலிகாப்டர் சேவை வழங்கவும், ஏற்பாடு நடந்து வருவதாகவும் இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதியான கீழக்கரை பகுதியில் அரசு ஹெலிகாப்டர் தளம் அமைக்க முயற்சி செய்யலாம் என்றும் ஹெலிகாப்டர் தளம் அமைவதின் மூலம் இப்பகுதியில் சுற்றுலா உள்ளிட்ட தொழில் வளம் பெற வாய்ப்பு ஏற்படும் என இப்பகுதியை சேர்ந்தோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே கீழக்கரைடைம்ஸில் வெளியான செய்தி :-
கீழக்கரை அருகே ஏராளமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கீழக்கரை அருகே அமைந்துள்ளன.இதனால் இக்கடல் பகுதிக்கு வெளிநாட்டை சேர்ந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.மேலும் இப்பபகுதியில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு அதிகப்படியாக கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் முன்னணி தொழில் நிறுவனங்களின் பார்வை வானம் பார்த்த பூமி என்று அறியபட்ட இப்பகுதியை நோக்கி திரும்பியுள்ளது.ஏராளமான தொழில் அதிபர்கள் இப்பகுதிக்கு வருகை புரிவதற்கு வாய்ப்புள்ளது.தற்போது பெரும்பாலான முண்ணனி தொழில் நிறுவன அதிபர்கள் கார்,ரயில் போன்ற பயணத்தை விட தனியார் ஹெலிகாப்டர்களில் அதிகளவில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.தற்போதே அரசாங்கம் இப்பகுதியில் ஹெலிகாப்டர் நிரந்தர தளம் அமைப்பதற்கான ஈடுபட வேண்டும்.
ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கு கீழக்கரையை விட பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது. ஏற்கெனவே பல்லாண்டுக்கு முன் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் சரீப் வரை கீழக்கரையில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்து சென்றிருக்கின்றனர்.
எனவே இப்பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் சேவைக்கான நிரந்தரமான ஹெலிகாப்டர் தளம் அமைக்க தடையில்லா சான்று வழங்குவதற்கு ஆய்வு நடத்தப்பட்டு தளம் அமைப்பற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.இதன் மூலம் எதிர்காலத்தில் இப்பகுதிக்கு தொழில் வாய்ப்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.