Monday, July 30, 2012

நகராட்சி தலைவர்,கலெக்டர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக‌ இடி மின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட பல‌ கவுன்சிலர்கள் சார்பில் போஸ்டர்!



நகராட்சி தலைவர்,மாவட்ட கலெக்டர்,நகராட்சிகளின் மண்டல இயக்குநர் உள்ளிட்ட பலருக்கு, ஊழலை த‌டுத்த‌த‌ற்கு நன்றி என‌ தெரிவித்து 5(சாகுல் ஹமீது),6(தங்க ராஜ்),7(அன்வர் அலி),8(செய்யது கருணை),18(முகைதீன் இப்ராகிம்),19(அரூசியா பேகம்),20(ஹாஜா நஜிமுதீன்),21(ஜெயபிரகாஷ்) வார்டு கவுன்சிலர் சார்பாக என்று அச்சிடப்பட்டு நகர் முழுவதும் ஏராளமான‌ போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 30, 2012 at 9:10 PM

    உண்மையிலேயே உங்களுக்கு மக்கள் சேவையில் நாட்டம் இருக்குமானல், தெரு விளக்கு ஏல அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிலிப்ஸ், கிராம்டன், ஹேவல்ஸ் தயாரிப்பள்ள்ர்களின் மொத்த் விற்பனை பிரதிநிதிகள் இராம்நாதபுரத்திலும், மதுரையிலும் அனேகர் உண்டு. அவர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களையும் கலந்து கொள்ளச் செய்வீர்களானால் சரியான விலையில் சரியான தரமான சாதனங்கள் கிடைக்க பிரகாசமான வாய்ப்புண்டு.

    அதுசரி, பதவி ஏற்றவுடன் பொது மக்களின் அவதியை போக்க புதிய பேருந்து நிலையத்தில் மூணரை இலட்ச செலவில் மின் கட்டண வசூல் மையம் கட்ட முதல் தீர்மானமாக போட்டு ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டி தம்பட்டம் அடித்தீர்களே அது என்னவாயிற்று?

    பழைய இரும்பு குடிநீர் குழாய்கள் அனைத்தையும் நீக்கி புதிய பிவிசி குழாய்கள் அமைக்க கடந்த நிர்வாகத்தில் ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று?

    தத்தோம் தத்தோம் ததிக்கினத்தோம்.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்August 4, 2012 at 8:37 PM

    இன்றைய தினமலர் (04/08/12 சனி மதுரை பதிப்பு) செய்தி:

    நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கூறியதாவது:

    அரசு விதிகளுக்கு மாறாக ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத மின் சாதன பொருட்கள் கீழக்கரை நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டன.தகவல் அறிந்ததும் ஒப்பந்ததாரரை பொருட்கள் திருமப எடுத்து செல்லுமாறு உத்திரவிட்டுள்ளேன்.

    டெண்டர் ஆணை ரத்து செய்யப்படவில்லை.அரசு விதிகள்படி குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை கொண்டு,ஏற்கன்வே வழங்கப்பட்ட நிறுவனத்தினரால் விரைவில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.

    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.