Monday, July 30, 2012

செய்தி எதிரொலி!கீழக்கரையில் போலீசார் வாகன சோதனை!நோ பார்கிங்கில் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ வாக‌ன‌ங்களுக்கு "வீல் லாக்"!


பட விளக்கம்:-கீழ‌க்க‌ரை வாக‌ன‌ம் நிறுத்த‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட "நோ பார்க்கிங்" பகுதியான‌ வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ வாக‌ன‌த்தை போலீசார் "வீல் லாக்' செய்த‌ன‌ர்


கீழ‌க்க‌ரையில் பள்ளிக்கு இயக்கப்படும் தனியார் வாக‌னங்கள், வாடகைக்கு இயக்க அனுமதி இல்லாமலும் , ஒட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட‌ பல் வேறு குற்றச்சாட்டுகள் நிலவுவதாக செய்திகள் வெளியானது.இதை தொட‌ர்ந்து கீழ‌க்க‌ரை இன்ஸ்பெக்ட‌ர் இள‌ங்கோவன் உத்தரவின் பேரில் இன்று காலை திடீர் வாக‌ன‌ சோத‌னை ந‌டைபெற்ற‌து. இதில் 6 ஆம்னி வேன்கள் முறையான அனுமதி இல்லாமல் மாத வாடகை அடிப்படையில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை ஏற்றி சென்றதால் அவர்கள் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இது குறித்து ச‌ப் இன்ஸ்பெக்ட‌ர் கார்மேக‌ம் கூறுகையில் ,
இன்று சோத‌னையை தொட‌ங்கியுள்ளோம். இது தொட‌ரும்.. மேலும் வாகனம் வைத்திருப்போர் அனைவரும் முறையான‌ ஆவ‌ன‌ங்களை வாகனத்தில் வைத்திருக்க‌ வேண்டும்.மேலும் நோ பார்க்கிங் ஏரியாவில் வாக‌ன‌ங்க‌ள் நிறுத்த‌ கூடாது மீறி நிறுத்தினால் வீல் லாக் செய்ய‌ப்ப‌டும் என்றார்

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 30, 2012 at 8:41 PM

    சரியான நடவடிக்கை. இக்கட்டான நேரத்தில் நிறைவாக செயல் பட்ட கீழக்கரை காவல் துறை அதிகாரிகள் திரு. இளங்கோ,திரு.கார்மேகம் மற்றும் காவலர்களுக்கும். இந்த விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கீழக்கரை டைம்ஸ்-ன் நிர்வாகத்திற்கும் ஊர் மக்களின் சார்பாக நன்றியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவிக்கும் அதே வேளயில் இது போன்ற சட்ட நடவடிகைகள் தவறு செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள் அஞ்சி ஒடுங்கும் வண்ணம் அடிக்கடி தொய்வில்லாமல் தொடர விரும்பிகிறோம்.

    துடிப்புடன் செயல்படும் தம்பிமார்கள் இளங்கோ மற்றும் கார்மேகம் அவர்களுக்கு இந்த நேரத்தில் எமது அன்பான கட்டளை. தங்களின் சிரமமான பணிகளுக்கிடையே தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி கீழக்கரை டைம்ஸ்-ன் செய்திகளையும் அதற்குறிய மக்களின் கருத்து தொகுப்புகளையும் காணுவீர்களானால் நகரின் நிறை குறைகளை கவுரவமான முறையில் அறிய நேரிடும். செய்வீர்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. உங்கள் கவனதிருக்கு,
    நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு உங்களை வரவேருகேறோம், அது போல இன்னும் நீரைய விசயங்க உங்கள் கவனத்தில் இறுக்கும், நங்கள் உங்களளுக்கு எந்த வாகையுளும் உதவதுக்கு ரெடியா இருகிறோம், மட்டுறும் வாகன ஓட்டுனர் சங்கம் இருவரும் கூடி செய்யவேண்டிய முக்கியமா ஒரு உஅதவி கீழக்கரை மக்களுக்கு ஆட்டோ, ஒமினி & இஈதர வாகனம் ஓடுனறாக்கள், தங்களால் சார்ஜ் ஒரு முரைபடி கிலோ மீட்டர், அதுக்கு தகுந்த வறாரு, அதாவது பெட்ரோல் ரேட் ஊயருவக்கு அதுபோல தங்கள் ரேட் நிர்ணயம் செயின்கள்
    அனால் நீங்க சார்ஜ் செயிம் பணம் ரெபம் ஓவர்.

    உதரணத்துக்கு லோக்கல்ல நீங்கள் சார்ஜ் முறை ( ஆட்டோ )
    நீங்கள் புது பஸ் ஸ்டேஷன் இருந்து பழைய பஸ் ஸ்டேஷன் வரை நீங்கள் செயும் சார்ஜ் 50 /= இருந்து 70 /= வரை
    நீங்கள் புது பஸ் ஸ்டேஷன் இருந்து கிழக்கு தெரு ( ஸ்கூல் வரை ) நீங்கள் செயும் சார்ஜ் 40 /= இருந்து 50 /= வரை
    நீங்கள் புது பஸ் ஸ்டேஷன் இருந்து புது கிழக்கு தெரு ( பள்ளி கடைசி வரை ) நீங்கள் செயும் சார்ஜ் 45 /= இருந்து 55 /= வரை
    நீங்கள் பழைய பஸ் ஸ்டேஷன் இருந்து புது பள்ளி வரை ( மேல தெரு ) நீங்கள் செயும் சார்ஜ் 40 /= இருந்து 45 /= வரை
    நீங்கள் பழைய பஸ் ஸ்டேஷன் இருந்து 500 பிளட் வரை நீங்கள் செயும் சார்ஜ் 50 /= இருந்து 70 /= வரை
    நீங்கள் மற்ற லோக்கல் சார்ஜ் குறைந்த சார்ஜ் 40 /= ( அதாவது 500 மீட்டர் குறைவாக).
    ஒரு லிட்டர் பெட்ரோல் விலைக்கு நீங்கள் 2 லோக்கல் ட்ரிப் செய்தல் போதும். உங்களுக்கு மீதம் உள்ள ட்ரிப் உங்கள் மைடேனன்சே சார்ஜ் - வடக்கை - அதில் முடியும். மற்றவை எல்லாம் உங்கள் இலாபம்.

    தயவு செய்து எல்லா மக்களுக்கு இது கொடுக்க முடியாம, அதுக்குக உங்கள் வேலையை குறையும் கூற இல்லை, அதுக்குக நீங்கள் ஒரு வரை முறையுடன் நீங்கள் சார்ஜ் செய்யவும்,

    நீரை கள்ள டிரைவர் களும் இர்ருகிரர்கள்(அதாவது முறையான உரிமம் இல்லாத), உங்கள் சங்கதீன் முலம் ஆட்டோ சார்ஜ் முறை படுத்தவும், கீழக்கரை எல்லாரும் பணக்காரன் இல்லை, 70% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் (அண்டர் போவேர்ட்டி லைன்) இருக்கிறார்கள், இதை மனதில் வைத்து நீங்கள் ஒரு கீழக்கரை இல் கஷ்டப்பட்டு நடுத்தர வர்க்க மக்களுக்கு கொஞ்சம் போக்குவரத்து வசதியை முறை படி நீங்கள் சார்ஜ் செய்யவும்

    எதனை மனதில் வைத்து இந்த முடிவு ( நடைமுறைக்கு ) கூடிய விரைவில் அமுல் வரும் என்று எதிர் பர்கேறோம், மக்கள் அன்றாட வாழ்வில் ரெம்ப முக்கியமா ஓன்று \போக்குவரத்து.........

    அது மட்டும் இல்லாமல் கீழக்கரை to ராமநாதபுரம்

    ட்ரிப் போறவர்கள் முன்று மணி நேரத்துக்கு மேல் டைம் ஆனால் அதுக்கு ஒரு சார்ஜ்
    இது என்ன கொடுமை சார்................
    உதரணத்துக்கு

    டாகடர் போகிறவருக்கு அந்த இடத்தை கரை பார்க் செயிது விட்டு டாகடர் வேலை முடித்ததும் மற்ற வேலை முடிப்பர், இதில் கவனிகவேடியது என்னவென்றல் கார் ரெம்ப தோரம் சுத்துவது இல்லை, அதுக்கு ஒரு சார்ஜ் ஏன்?



    கீழக்கரை பதிக்க பட்டவர்களில் ஒருவன்

    நல்ல இப்ராகிம்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.