Wednesday, July 4, 2012
கீழக்கரை புதிய சாலை பணி தரமில்லை!கலெக்டர் தலையிட கோரிக்கை!
ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பல் வேறு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை மக்கள் சேவை நல இயக்கத்தின் நிறுவனர் முஜீப் ரஹ்மான் கொடுத்துள்ள மனுவில்,
குடிநீர் குழாய் பதித்து விட்டு சாலை பணிகளை தொடங்க வேண்டும் ஆனால் அப்பணியை செய்யாமல் சாலை அமைத்து மக்கள் பணம் வீணாவதை கண்டித்தும் தற்போது நடைபெற்று வரும் சாலை பணிகள் தரமில்லாமல் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் உஸ்மான் சேட் கொடுத்துள்ள மனுவில்,
கீழக்கரை நகரில் உள்ள பொருத்துவதற்கு வந்துள்ள தெரு மின் விளக்குகளில் நடைபெற்றுள்ள ஊழலை விசாரித்து தரமான மின் விளக்கு அமைக்க வேண்டும் என மனு கொடுத்தார்.
18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கொடுத்துள்ள மனுவில்,
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு செய்து பதில் அளிக்காத நகராட்சியை கண்டித்தும் தற்போது நகராட்சி சார்பாக கீழக்கரை நகரில் நடைபெறும் பணி பற்றிய எஸ்டிமேட் காப்பி(பணி மதிப்பீடு படிவம்) வழங்காதது கண்டித்தும்,உடனே கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
முகம்மது காசிம் என்பவர் கொடுத்த மனுவில்,
வருவாய் ஆய்வாளர் தமிழரசு என்பவர் ரேசன் அட்டை தருகிறேன் என்ற பெயரில் பெண்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.
மக்கள் சேவை இயக்கத்தின் முஜீப் கூறுகையில்,
கீழக்கரையில் பல இடங்களில் சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.தரமில்லா சாலைகள் அமைக்கப்படுகிறது.சில தினங்களுக்கு முன் பஸ் நிலையம் அருகில் ஆளுங்கட்சியான அதிமுகவின் நகர் செயலாளர் ராஜேந்திரனே இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து சாலை பணிகளை தரமாக செய்யும்படி சத்தம் போட்டார்.கிழக்கரை தற்போது அமைக்கப்பட்டு வரும் எந்த சாலையும் தரமில்லை.மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவேதான் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.