கீழக்கரை நகரில் கடந்த சில நாட்களாக சுகாதாரத்துறை,நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கீழக்கரையில் ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில் ராமநாதரம் மாவட்ட கலெக்டர் கீழக்கரை வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தெற்குதெரு பகுதியில் கலெக்டரின் வாகனம் நிறுத்தப்பட்டது அப்பகுதியில் உள்ளோர் வாகனத்தை சூழ்ந்து சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அங்கு வந்த கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கலெக்டரிடம் "புதிய கமிஷனர் நியமிக்க வேண்டும் என்றும் நகராட்சி கூட்டத்தில் தீர்மாணங்களை விவாதிக்காமல் நகராட்சி தலைவர் நிறைவேற்றியதாக அறிவித்தார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து மனுக்களை அளித்தார் மேலும் சிலரும் மனு அளித்தனர்.
பத்திரிக்கையாளர்கள் படம் எடுப்பதை கலெக்டரின் உதவியாளர் தடுத்ததற்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துடன் தொடர்ந்து படம் எடுத்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.