Sunday, July 22, 2012
கீழக்கரையில் விபரீதம்! கழிவுநீராக வரும் குடிநீர்!நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட காவேரிகூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரை நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் குடிநீர் குழாய்களில் குடிநீர் மாசடைந்து கறுப்பாக கழிவுநீர் போல் வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து ஜலாலுதீன் என்பவர் கூறுகையில்,
பூமிக்கு அடியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்புகள்தான் இன்றும் உபயோகத்தில் உள்ளன.பழையவை பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. மேலும் புதிய நகராட்சி பதவியேற்று புதிய குடிநீர் பைப்கள் அமைப்பதற்கும் ,குடிநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கும் நிதி ஒதுக்கி தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் கீழக்கரை மக்கள் அவதிப்பட்டு
வரும் சூழ்நிலையில் இது போன்ற மாசடைந்த குடிநீரால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பட விளக்கம்:- கீழக்கரை ஜின்னா தெருவில் குடிநீரில் மாசடைந்து வரும் குடிநீர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.