Wednesday, July 18, 2012

கீழக்கரை நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ராமநாதபுரம் வரை நடை பயணம் !



படம்:- சாலிஹ் ஹுசைன்

நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம், ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயணம் வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கீழக்கரை நகராட்சிக்கு இதுவரை கமிஷனர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், வளர்ச்சிப்பணிகள் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் கடுமையாக பாதிக்கின்றன. கீழக்கரை நகராட்சிக்கு தனியாக கமிஷனர் நியமிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் பயனில்லை. இதைக் கண்டித்தும், ஊழல் குற்றச்சாட்டுகளை களையக் கோரியும் கீழக்கரை நகராட்சிக் கவுன்சிலர்கள் ஏழு பேர், கீழக்கரை & ஏர்வாடி முக்கு ரோட்டில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நேற்று நடைபயணம் சென்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த நடைபயணத்தில் கவுன்சிலர்கள் சாகுல்ஹமீது (5வது வார்டு) தங்கராஜ் (6வது வார்டு) அன்வர் அலி (7வது வார்டு) முகைதீன் இபுராகிம் (18வது வார்டு) அருஸியா பேகம் (19வது வார்டு) இடிமின்னல் ஹாஜா (20வது வார்டு) ஜெயபிரகாஷ் (21வது வார்டு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன், நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான், கீழக்கரை மக்கள் விழிப்புணர்வு நல முன்னேற்றச் சங்க செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை நிர்வாகிகள், புதிய தமிழகம் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ரஹ்மத் நிஷா மற்றும் நகர் நிர்வாகி அசீனா, சுலைமான், ஜஹாங்கிர் அருஸி, முன்னாள் கவுன்சிலர் வேல்சாமி, மக்கள்நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன் இணைச்செயலர் சாகுல்ஹமீது, பொருளாளர் முகமது சாலிஹ் ஹூசைன் உள்பட ஏராளமானோர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்ற இந்தக் குழுவினர், கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக கமிஷனர் நியமனம் செய்யவேண்டும். நகராட்சியில் நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யவேண்டும். நகராட்சியில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகளை களையவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், பெண் பிரதிநிதிகளின் கணவர் மற்றும் உறவினர் தலை யீட்டை தடுக்கவேண்டும். உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கீழக்கரை நகராட்சிக்கு கமிஷனர் நியமனம், ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணம் சென்றனர்.

இவ‌ர்க‌ளுக்கு ராமநாத‌புர‌ம் ர‌யில்வேகேட் அருகில் எஸ்டிபிஐ மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஜியாவுதீன் ம‌ற்றும் அப்பாஸ் ஆலிம் த‌லைமையில் ஏராள்மானவ‌ர்க‌ள் வ‌ர‌வேற்பு அளித்த‌ன‌ர்.
க‌வுன்சில‌ர்க‌ள் கூறுகையில் ,ந‌கராட்சியை சீர்ப‌டுத்தும் வ‌ரை ம‌க்க‌ள் ஆத‌ர‌வுட‌ன் போராட்ட‌ம் தொட‌ரும் என்ற‌ன‌ர்.

1 comment:

  1. உங்களில் ஒருத்தன்July 27, 2012 at 2:14 PM

    கிழக்கரை நகராட்சிக்கு எத்தனையோ சேர்மன்கள் வந்து போய் இருக்கிறார்கள் பெண்கள் கூட. இந்தளவு கூச்சலோ குழப்பமோ சேர்மனுக்கு எதிரான ஆர்ப்பாட்டமோ நடந்ததில்லை .ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் கூச்சல் குழப்பம் .உருப்படியான எந்த விசயமும் நடந்ததாக தெரியவில்லை .இதற்க்கு மக்கள் மத்தியில் சில காரணங்கள் விவாதிக்கப்படுகிறது .அதை உங்கள் முன் வைக்கிறோம் .இவை நியாயமான காரணமாக இருக்கும் பட்சத்தில் இன்னும் 4 வருடங்கள் கிழக்கரை மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பே கிடையாது .
    1 .சேர்மன் அவர்களுக்கு படிப்பு அறிவும் நிதர்சன அறிவும் மிக மிக குறைவு .அதனால் கூச்சல் குழப்பங்களை கட்டுப்படுத்த அவரால் இயலவில்லை .
    2 .சேர்மன் அவர்களை ஆட்டுவிப்பது அவருடைய கணவரும் சகோதரர்களும் தான் மற்றும் சில முடிவுகள் தீர்மானங்கள் கூட இவர்களுடைய வழிக்காட்டுதலின் பெயரில் தான் நடக்கிறதாக .குற்றச்சாட்டு .
    3 சேர்மன் அவர்களுக்கு சுயமாக முடிவெடுக்க தெரியாத அளவுக்கும்
    4 கவுன்சிலர்களோடு ஆரோக்கியமான விவாதமோ கருத்துகளை உருவாக்கும் சூழலை உருவாக்க தெரியாமை .
    5 அரசாங்க அதிகாரிகளை வீட்டுக்கு அழைத்து விருந்தும் தடபுடலாக பிக்னிக்கும் நடத்துவதாக குற்றச்சாட்டு .
    6 நகராட்சி ஊழல் மயம் குப்பை மயம் ஆவதை தடுக்க அதிகாரிகளை
    உடனுக்குடன் செயலாற்ற ஊக்கப்படுத்தாமை.
    கவுன்சிலர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு
    1 சேர்மன் அவர்களோடு சேர்ந்து நகராட்சி பிரச்சினைகளை தீர்க்க உடன்படாமை
    2 எதற்க்கெடுத்தாலும் கூச்சல் போடுவதும் சபையை அவமதிப்பதுமாக நடப்பதும் என்று இவர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது
    3 சேர்மனும் பெண் என்பதால் ஒத்துழைப்பு கொடுத்து நடந்து பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இவர்களிடம் இல்லை என்பதாக குற்றச்சாட்டு
    ஒரே ஒரு பயன் கீழக்கரை மக்களுக்கு
    இதுவரை கீழக்கரை நகராட்சி கட்டிடம் உள்ளே என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாமல் இருந்தது இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது மாஸா அல்லா

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.