கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா சென்னை சென்று உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கீழக்கரைக்கு தனி கமிஷனர் நியமனம் உள்ளிட்ட கீழக்கரை நலன் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்.
விரைவில் கமிஷனர் நியமிக்கபடுவார் என்றும் பல்வேறு கோரிக்கைகளும் உரிய வகையில் நிறைவேற்றப்படும் என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்தனர்.
என்னமோ போங்கவே. நல்லது நடந்தால் சரி. இது போலத்தான் நகரின் முதல் குடி மகள் அதிகாரப் பொருப்பை ஏற்றுக் கொண்ட நேரத்தில் தலைநகர் சென்று சில அமைச்சர்களை சத்தித்து மனு அளித்து விட்டு வந்தார்கள். அதன் பயன் என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
ReplyDeleteஅது சரி.1964க்கு பின் நகரில் ஜனத்தொகையும் கூடி விடடது. நிர்வாகத்தின் வ்ருமானமும் அபரிதமாக கூடி விட்டது. ஊரும் விரிவடைந்து விட்டது. இன்னும் அந்த எண்ணிக்கையில் தான துப்பரவு பணியாள்ர்களா?.இப்போது கொடுத்த மனுவிலாவது அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டதா?
அரபகத்தில் பணி ஆற்றும் நமதூர் சீதேவிகளின் நன்கொடையால் நகரில் நடைபெறும் பெரும்பாலான சுகாதார பணிகளை செவ்வன நடத்தும் கீழக்கரை வெல்பேர் அஸோஸியேஷன் இல்லை என்றால் நமது நகரின் சுகாதார நிலைமையினை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அவர்களை வாழ்த்த ஈடு இணையான வார்த்தைகளும் எமது சிற்றறிவுக் கிடைக்கவில்லையே.அதே நேரத்தில் இறைவனின் நற்கூலி நிச்சயமான அவர்களுக்கு உண்டு. நம்து துவாக்களை அங்கீகரிப்பவனிடமே ஒப்படைத்து விட்டோம்,ஆமீன்