
கீழக்கரை சேர்ந்தவர் சித்தி பரிதாபீவி சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் அருணாசலம்(30), ராஜா(28), மகேசுவரன்(32) ஆகியோரை கைது செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நெஞ்சு வலியில் இறந்ததாக கருதி உறவினர்கள் கீழக்கரை கடற்கரை பள்ளி மையவாடியில் அடக்கம் செய்துள்ளனர்.கொலை செய்யபட்டுள்ளது தெரிய வந்ததால் தற்போது அரசு அதிகாரிகள் முன்னிலையில் அரசு டாக்டர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடலை எடுத்து போஸ்மார்ட்டம் செய்து வருகின்றனர் .இதனால் கடற்கரை பள்ளி அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலை செய்தது குறித்து அருணாசலம்(30), ராஜா(28), மகேசுவரன்(32) ஆகியோர வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,சித்தி பரிதாபீவி வீட்டின் அருகில் தங்கியிருந்து கலர் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.
அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த 4-ந்தேதி 3 பேரும் வீட்டிற்குள் புகுந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த சித்தி பரிதாபீவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சித்தி பரிதாபீவியின் உடலை இயல்பாக படுத்திருப்பதுபோல் வைத்துவிட்டு நகைகளுடன் சாத்தூருக்கு தப்பிச் சென்று விட்டனர். நகைகளை விற்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்ட்மார்ட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கீழக்கரை செய்திகளை ,சேர்மானம் இன்றி அப்படியே வெளியிடுவதில் கீழக்கரை டைம்ஸ் முதலிடம்தான் ............
ReplyDelete