Wednesday, August 15, 2012

டாஸ்மாக் கடைகள் அதிகரிப்பு!வெளியூர் மதுபான கடைகள் கீழக்கரையில் செயல்படுவதா? கடும் எதிர்ப்பு !



கீழக்கரை நகருக்குள் மூன்று மதுபான கடைகள் உள்ளது. இவை பேருந்து நிலையம் ,மருத்துவமனை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில் இதில் இர‌ண்டு ம‌துக்க‌டைக‌ள் வெளியூருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்ட‌வை என்றும் அந்த‌ ஊர்க‌ளில் செய‌ல்ப‌டுத்த‌ முடிய‌த‌தால் கீழ‌க்க‌ரையில் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகியுள்ள‌து.தற்போது கீழக்கரை நுழைவு வாயிலான வண்ணாங்குண்டு மின் கட்டண அலுவலகம் அருகில் புதியதாக மேலும் ஒரு மதுபான கடையை திறந்துள்ளார்கள்



இது குறித்து எஸ்டிபிஐ ந‌க‌ர் த‌லைவர் செய்யது அப்தாகிர் கூறியதாவது,

கீழக்கரையில் உள்ள மூன்று மதுபான க‌டைக‌ளில் இர‌ண்டு க‌டைக‌ள் ந‌த்த‌ம் ம‌ற்றும் காஞ்சிர‌ங்குடி ப‌குதிக்கு ஒதுக்க‌ப்ப‌ட்ட‌து என்று தகவல்கள் வந்துள்ளது.ஏன் கீழக்கரையில் திறக்க வேண்டும்இதை அரசு தரப்பு தெளிவுபடுத்த வேண்டும் இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டால் இச்செயல் மிகவும் கண்டிக்கதக்கது.உடனடியாக இக்கடைகளை கீழக்கரையிலிருந்து அகற்ற வேண்டும். உடனடியாக அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.



இது குறித்து சமூக ஆர்வலர் தங்கம் ராதகிருஸ்ணன் கூறுகையில் ,

கீழக்கரை நுழைவு வாயிலான வண்ணாங்குண்டு அருகில் புதியதாக மேலும் ஒரு மதுபான கடையை திறந்துள்ளார்கள் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியாக இது இருந்தாலும் இக்கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இதையும் சேர்த்தால் கீழக்கரை பகுதிக்கு 4 மதுபான கடைகள் ஆகும்.வரலாற்று சிறப்புமிக்க கீழக்கரையில் இத்தனை ம‌துபான‌ கடைகளை அர‌சாங்க‌ம் திற‌ந்திருப்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்? எங்க‌ள் அமைப்பின் சார்பில் இத‌ற்காக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ உள்ளோம் என்றார்.





No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.