Wednesday, October 2, 2013

அதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் துண்டு பிரசுரம்!

அதிமுக அரசின் 2 ஆண்டு கால வேதனைகள் என கீழக்கரை யில் திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் சம்பத் தலைமை வகித்தார். ஒன் றிய செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், துணைசெயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகு, மாவட்ட துணை செயலாள ர்கள் திலகர், சம்பத் ராஜா, மோகன்தாஸ், பொருளா ளர் பொன்னு சாமி, முன் னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சுல்தான் செய்யது இபுராகிம் ராஜா முன்னிலை வகித்தனர்.
கீழக்கரை பஸ் ஸ்டா ண்ட், இந்து பஜார், முஸ்லீம் பஜார், கிழக்கு தெரு, வட க்குத் தெரு, வள்ளல் சீதக்காதிசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திமுக தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரசாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் புல்லாணி, ஆனந்த், நகர் துணை செயலாளர்கள் நையினார், ஜமால்பாருக், பொருளாளர் ஜகுபர், கவுன்சிலர் சாகுல்ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. அதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் துண்டு பிரசுரம்! செய்வதற்கு திமுகவினர்க்கு என்ன தகுதி இருக்கு?
    திமுக ஆட்சில் சாதித்தது தான் என்ன? திமுக ஆட்சில் கீழக்கரை மக்களுக்கு கிடைத்த பயன் தான் என்ன ?

    ReplyDelete
  2. அதிமுக அரசை கண்டித்து கீழக்கரை திமுகவினர் துண்டு பிரசுரம்! செய்வதற்கு திமுகவினர்க்கு என்ன தகுதி இருக்கு?
    திமுக ஆட்சில் சாதித்தது தான் என்ன? திமுக ஆட்சில் கீழக்கரை மக்களுக்கு கிடைத்த பயன் தான் என்ன ? முதலில் தங்களின் குறைகளை சரி செய்து கொள்ளுகள் , பிறகு அடுத்தவர் குறைகளை பற்றி பேசலாம் ,

    ReplyDelete
  3. கீழக்கரை அலி பாட்சாOctober 2, 2013 at 8:51 PM

    நிறம்பத்தான் தைரியம்.வெட்கம் இல்லாமல் நோட்டீஸ் கொடுக்கிறார்களாம்.தொகுதி பாராளு மன்ற உறுப்பினர் எங்கே? தொகுதி நிதி 20 கோடி எங்கே? எங்கே? இன்றளவும் இராமநாதபுரம் பாராளு மன்ற தொகுதி உங்கள் கையில் தானே இருக்கிறது!!!!ஊருக்கு என்னத்தை சாதித்து விட்டீகள். ஒன்று விடாமல் அதை அனைத்தையும் ஒரு பிட் நோட்டீஸாக அச்சடித்து மக்களுக்கு வினியோகம் செய்யுங்களேன் (முந்தா நாள் கொடுத்து போல் வால் போஸ்டாக அல்ல)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.