Monday, October 21, 2013

கீழக்கரையில் நலப்பணிகள் நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள்! சேர்மன் வேண்டுகோள்!




கீழக்கரையில் மழை பெய்து பல்வேறு இடங்களில்  சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது இதை அகற்றும் விதமாக நகராட்சியின் கழிவு நீர் உறிஞ்சு லாரி மூலம் கழிவு நீர் அகற்றப்பட்டது.இப்பணிகளை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா நேரில் பார்வையிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது,

கீழக்கரையில் பல்வேறு நல பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.குப்பைகளிலுருந்து மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை கீழக்கரையில் செயல்படுத்த அம்மா அவர்களின் தலைமையிலான அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

சமீபத்தில் 17 அக்டோபர்  "தினகரன் " நாளிதழில் பட்டமரத்தை அகற்ற கோரிக்கை விடுத்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.முயற்சிகள் எடுக்கப்பட்டு விட்டது.அவர்களின் கோரிக்கையை ஏற்று வெகு விரைவில் இது அகற்றப்படும்.

இம்மரத்தை பல மாதங்களுக்கு முன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.ஆனால் குறைந்த விலைக்கு மரத்தை விற்க முயல்கிறார்கள் என கூறி சிலர் மரத்தை அகற்றுவதை தடுத்து விட்டார்கள். தற்போது  "அந்த"  சிலரும் கோரிக்கை வைக்கும் மக்களோடு சேர்ந்து மரத்தை அகற்றவில்லை என குற்றம் சாட்டி திரிகிறார்கள்.எனவே "அந்த" சிலரின்  நோக்கம் மரத்தை அகற்றுவதல்ல இதன் மூலம் நகராட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே ....

அதுபோன்று "கீழக்கரை டைம்ஸ்" இணையதளத்தில் சாலை தெரு பகுதியில் நடைபெறும் குழாய் பணிகளில் தரமில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது இது குறித்து ஆய்வு செய்து தரமில்லை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணிகள் தரமாக நடைபெறும் என உறுதி கூறுகிறேன்

 கீழக்கரை நகர் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என .வேண்டுமென்றே நகராட்சி நிர்வாகத்தை குற்றஞ்சாட்டி குறை கூறுபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.