ராமநாதபுரம் அருகே உள்ள கீழக்கரை ரெயில்வே கேட்டில் நேற்று மதியம் ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் ரெயிலுக்காக கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் கேட்டின் இழுவை கம்பி அறுந்ததில் கேட் கீழே விழுந்தது. இதனால் மதுரை செல்லும் ரெயிலுக்காக ஒருபுறம் மட்டும் கேட் மூடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து அவசர காலத்தில் பயன்படுத்தும் சங்கிலியால் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை ரெயில்வே ஊழியர் நிறுத்தினார். அந்த வழியாக ரெயில் சென்றதும் கேட்டை அப்புறப்படுத்தி கேட்டை சரிசெய்யும் பணியில் ரெயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.