Tuesday, October 22, 2013

விடுமுறையில் கீழக்கரையில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்!





ஹஜ்ஜுப் பெருநாளின் இரண்டாவது நாளில் இருந்து கேரள முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் நாகூர், ஏர்வாடி,கீழக்கரை போன்ற ஊர்களில் உள்ள தர்ஹாக்களுக்கு வந்து செல்கிறார்கள் அதன் ஒரு பகுதியாக கடந்த 5 நாட்களாக கீழக்கரையில் குறைந்தது கேரளவை சேர்ந்த 50 சுற்றுலா பேருந்துகள் வந்து செல்கின்றன.தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஏற்கெனவே நெருக்கடியான சாலைகள் அமைந்த கீழக்கரையில் சுற்றுலா பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது









இது குறித்து அஹமது என்பவர் கூறியதாவது,
கேரளாவில் பெருநாள் விடுமுறைகளையடுத்து ஆண்டுதோறும் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம் பெரியோர்களின் தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்ய புறப்பட்டு விடுகிறார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் கீழக்கரை வருவதற்கு தவறுவதில்லை. கீழக்கரையின் மத்தியில் உள்ள 350 வருடங்கள் பழமையான செத்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி அவர்களால் கடற்பாறைக் கற்கலால் நிர்மாணிக்கப்பட்ட அழகிய கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலையும், வள்ளல் சீதக்காதியின் ஆன்மீக குருவான மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் தர்ஹாவிற்கு வந்து ஜியாரத் செய்து செல்கிறார்கள்.நகரினுல் அமைந்து பல்வேறு தர்ஹாக்களுக்கு சென்று வரும் பயணிகளும் இதில் அடங்குவர்

மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்களை ஊருக்கு வெளியே ஏற்பாடு செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க முடியும்.இவர்களை போன்று சுற்றுலா வருபவர்களுக்கு நகர் எல்லை பகுதியில் அரசு தங்கும் விடுதி ஏற்படுத்தி தர வேண்டும் மேலும் கீழக்கரை கடல் பகுதிநீண்ட கடற்கரையும் அழகிய தீவுகளை உள்ளடக்கியது எனவே கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் பகுதியையும் சுற்றுலாவுக்கு ஏற்றவாறு தயார் செய்து அரசாங்கம் மேம்படுத்தலாம். என்றார்.

படம் மற்றும் செய்தி: அஹமது குத்ப்தீன் ராஜா



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.