Wednesday, October 9, 2013

ஏர்வாடி தர்ஹாவில் கொடி இறக்கம் !


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழாவின் இறுதி நிகழ்ச்சியான கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 ஏர்வாடி  தர்ஹாவில் 839ஆம் ஆண்டு உரூஸ் என்னும் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு விழா செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கி தினமும் மவ்லீது என்னும் புகழ்பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
 செப்.17ஆம் தேதி மாலை ஏர்வாடி தர்ஹாவில் 
உள்ள மேடையில் கொடியேற்ற நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உரூஸ் என்னும் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு விழா செப் 29ஆம் தேதியும் நடைபெற்றன. 
 இறுதி நிகழ்ச்சியான கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 காலை குர்ஆன் தமாம் செய்து சிறப்பு துஆ செய்யப்பட்டதுடன் மாலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  நெய்சோறு விநியோகம் செய்யப்பட்டது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட டவுன்காஜி சலாஹூதீன் உலக நன்மைக்காக சிறப்பு துஆ ஓதினார். ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் கமிட்டி தலைவர் அம்ஜத்ஹூசைன், உதவி தலைவர் செய்யது சிராஜூதீன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அருஸி ஆகியோர் செய்திருந்தன

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.