Sunday, October 20, 2013

சாலையை உடைத்து தரமற்ற முறையில் குழாய் புதைக்கும் பணி!நடவடிக்கை எடுக்க கோரிக்கை!






கீழக்கரை சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து பண்டகசாலை சிமெண்ட் ரோடு வரை கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் நகராட்சி ஒப்பந்த வேலை நேற்று முதல் நடை பெறுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜாபர் கூறியதாவது,
ஏற்கெனவே போடப்பட்ட சிமெண்ட் ரோடு முற்றிலுமாக ஜேசிபியால் உடைக்கப்பட்டு குழாய் பதிப்பதற்க்கு புதிதாக பள்ளம் தோண்டப்படுகிறது. பள்ளம் தோண்டும் போது அங்கு சாலையோரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் உடைக்கப்பட்டு குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் கழிவு நீர் நிரம்பி அதன் உள்ளேயே குழாய் போடப்படுகிறது.
உடைக்கப்பட்ட கழிவு நீர் வாய்கால் அடைக்கப்படாததால் போடப்பட்ட குழாய்கள் கழிவு நீரில் மிதந்து ரோட்டின் மேல் புறத்தில் வந்து விடுகிறது அதை அப்படியே மண்ணை போட்டு மூடுகிறார்கள். கழிவு நீரின் உள்ளேயே போடப்படுவதால் பைப் ஜாயிண்ட்கள் சரியான முறையில் சேருவதில்லை. கழிவு நீர் ஓடும் வாட்டமும் சரியில்லை இப்படி தரமற்று போடப்படும் குழாய்கள் எத்தனை நாட்களுக்கு வரும் எப்போது உடையும் என்று தெரியவில்லை எனவே சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுத்து பணியை தரமாக செய்ய வேண்டுகிறோம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.