Friday, October 25, 2013

இறால் பண்ணைகளால் நிலத்தடிநீர் ஆதாரம் பாதிப்பு! நடவடிக்கை எடுப்பது குறித்து கீழக்கரை சேர்மனுடன் சுற்றுப்புற கிராமத்தினர் ஆலோசனை!


மேலப்புதுக்குடி,கீழப்புதுக்குடி,மற்றும் கீழக்கரை அருகே உள்ள  பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியாவை சந்தித்து இறால் பண்ணைகளால் நிலத்தடி ஆதாரம் பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறி வருகிறது இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கீழக்கரை நகராட்சி தலைவரை சந்தித்து ஆலோசனை செய்தனர்


மேலும் அவர்கள் கூறியதாவது,

 சுமார் 8க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், கீழக்கரை நகரசபை பகுதிக் கும் சேதுக்கரையில் அமைக் கப்பட்டுள்ள 10 குடிநீர் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகி றது. கோரைக்கூட்டம் முதல் சேதுக்கரை வரை அமைந் துள்ள 20க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளால் நிலத் தடி நீர் ஆதாரம் உப்பு நீராக மாறி வருகிறது. இந்த நிலை யில் சேதுக்கரை குடிநீர் திட்ட கிணறு பகுதியில் புதிதாக இறால் பண்ணை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் குடி நீர் கிணறுகளில் நீர் ஆதாரம் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இறால் பண்ணை களை அப்புறப்படுத்த வேண் டும். ஏற்கெனவே இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.கீழக்கரை நகரும் இதனால் பாதிக்கப்படும் என்பதால் சேர்மனிடம் இது குறித்து ஆலோசனை செய்தோம்.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது,


மிக முக்கியமான பிரச்சனை இது எனவே விரைவில்  கலெக்டரை சந்தித்து இது பற்றி எடுத்துரைத்து  தீர்வு காணப்படும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.