கீழக்கரை ராஜாக்கான்
கோட்டாறு கவிஞர் அத்தாவுல்லாவின் "நீல நதிப் பூக்கள்" என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாயில் உள்ள ஈ.டி.ஏ. ஸ்டார் ஹவுஸ் அரங்கில் 9-10-2013 அன்று மாலை 8.30 மணியளவில் நடைபெற்றது. ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் நிர்வாக இயக்குநரும், ஈமான் சங்கத்தின் தலைவருமான அல்ஹாஜ் செய்யத் எம். சலாஹுத்தீன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
விழாவின் துவக்கமாக மௌலவி சுலைமான் மஹ்லரி இறைவசனங்களை ஓத, துபாய் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஜகன்னாதன் வரவேற்புரையாற்றினார். ரிதம் ஈவென்ட்ஸ் சபேசன், அமீரகத் தமிழ் மன்றத்தின் ஜெஸீலா பானு, ஈமான் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அல்ஹாஜ் செய்யத் எம். சலாஹுத்தீன் நூலின் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலின் முதல் பிரதியை இந்திய தூதரகத்தின் துணை தூதர் மாண்புமிகு அசோக் பாபு பெற்றுக் கொண்டார். மெட்ராஸ் டெவலப்மென்ட் சொசைட்டி தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேரா. மன்சூர், செயல் இயக்குநர் அன்வர் பாஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அமீரகத் தமிழ் மன்றத்தின் ஆசிஃப் மீரான் நூல் ஆய்வுரை வழங்கினார். தொடர்ந்து துணை தூதர் அசோக் பாபு நிறைவுரையாற்றினார். பின் நூலாசிரியர் கவிஞர் அத்தாவுல்லா ஏற்புரையாற்றினார். கீழை ராஸா நன்றியுரையாற்ற, அமீரக காயிதே மில்லத் பேரவை ஹமீதுர் ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
நாகர்கோவில் முஹம்மது காசிம், கடையநல்லூர் டி.பி.எஸ். ஷாஹுல் ஹமீத், கீழக்கரை ஹமீத் கான் மற்றும் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் நிறுவன ஊழியர்கள், அமீரகத்தின் அனைத்து தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்ட அமீரகத் தமிழ்ச் சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையில், ஸ்பர்ஜன், கீழை ராஸா, ஹமீதுர் ரஹ்மான், இரவண சமுத்திரம் முகைதீன் பிச்சை ஆகிய விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.