Sunday, October 6, 2013

கழிவுகளிலிருந்து மின்சாரம்!கீழக்கரை நகராட்சியில் செயல்படுத்த கோரிக்கை!

photo source.cmdachennai.gov.in
மாநிலம் முழுவதும், 150 நகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு நகராட்சிகளிலும் தினமும், மூன்று முதல், 20 டன் வரை, அழுகிய காய்கறி, கறிக்கோழி இறக்கை, ஆடு, மாடு கழிவு உள்ளிட்டவை குப்பையில் கொட்டப்படுகிறது. பெரும்பாலான நகராட்சிகள் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிக்கிறது. தமிழகத்தின் மின்தேவை, 

12,000 மெகாவாட்டை தாண்டி விட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்தேவையை சமாளிக்கும் வகையில், சோலார் மின்உற்பத்தி, குப்பையில் இருந்து, மின்உற்பத்தி என, அரசு பலவகையிலும் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நகராட்சிகளில் அழுகிய காய்கறி, இறைச்சி கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதை தடுக்கவும், அதில் இருந்து, மின் உற்பத்தி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

சோதனை அடிப்படையில், சமீபத்தில், ஆற்காடு நகராட்சியில் தினமும் கிடைக்கும், மூன்று டன் காய்கறி கழிவு மூலம், மின் உற்பத்தி செய்யும், மினி மின் உற்பத்தி நிலையம் அமைத்து, நாள்தோறும், 192 யூனிட் வரை, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

 இதை தொடர்ந்து, தற்போது, மேட்டூர், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய நான்கு நகராட்சிகளிலும், அழுகிய காய்கறிகளில் இருந்து, மின் உற்பத்தி செய்யும் மினி மின்நிலையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மேட்டூர் நகராட்சியில், மினி மின்உற்பத்தி திட்டத்துக்கு, 90 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சி சர்க்கார் தோட்டம் பகுதியில், மினிமின் நிலையம் அமைக்க, முதல்கட்டமாக, மண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தவுடன் கட்டுமான பணி துவங்கும். மேட்டூர் நகராட்சியில் தினமும், ஐந்து டன் காய்கறி மற்றும் இறைச்சி கழிவு கிடைக்கிறது. இந்த கழிவுகளில் இருந்து தினமும், 320 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தபோதிலும், நோயை பரப்பும் அழுகிய காய்கறிகள், இறைச்சி கழிவுகள் அழிக்கப்படும் என்பதால், நகராட்சி பகுதி சுகாதாரமாக இருக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்

.இந்நிலையில் கீழக்கரை நகராட்சியில் நாளொன்றுக்கு 2 லிருந்து மூன்று டன் அளவுக்கு குப்பைகள் குவிகின்றன.இதில் மூன்றில் ஒரு பங்கு இறைச்சி கழிவாகும்தற்போது குப்பை கிடங்கு திறக்கப்பட்டு குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகின்றன.5 டன் எடை கொண்ட மக்கும் கழிவிலிருந்து நாளொன்றுக்கு 440 யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் 750 தெரு விளக்குகளை 12 மணி நேரம் ஒளிரச் செய்ய இயலும்.கீழக்கரை நகராட்சியிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் யாசர் அராபாத் கூறியதாவது,

 கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியை கீழக்கரையிலும் செயல்படுத்தலாம்.இதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.கீழக்கரை நகராட்சிகெனதனியாக குப்பை கிடங்கு இருப்பதால இதை செயல்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.மேலும் மின் தேவையையும் சரி செய்வதுடன் சுகாதாராமும் சிறந்து விளங்கும்.உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

ஏற்கெனவே காயபட்டிணம் உள்ளிட்ட 24 நகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.