கீழக்கரை ஹமீதியா மெட்ரிக்., பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கீழக்கரை ஹமீதியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் படிக்கின்றனர். வகுப்பறையில் மாணவர்களின் நடத்தை, பாடங்கள் கற்பிக்கும்போது அவர்களின் நிலை குறித்து அறியும் வகையில் பள்ளியில் 19 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
File(old)picture
இதை, தாளாளர் டி.எஸ்.ஏ. ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் சஹர்பானு முன்னிலை வகித்தார்.
புதுப்பள்ளி பேஷ் இமாம் மன்சூர் அலி துவா (பிரார்த்தனை) செய்தார்.
அவர் கூறியதாவது: மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கப்படும். வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகள் கண்காணிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும்
. ஆண்கள் பிரிவில் எட்டு கேமரா, மெயின் பிளாக்கில் 11 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து பெற்றோர்களுக்கு, மாணவர்களின் வருகை குறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிக்கப்படும்
Good Attempt....Appreciated
ReplyDeleteகீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்ட கூடிய நல்ல திட்டம், இது போன்று கீழக்கரையில் அணைத்து பள்ளியில், மாணவர் ஆசிரியர்கள்களின் நடவடிக்கையை கண்காணிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருதபட வேண்டும் , கீழக்கரையில் அணைத்து பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மாணவர்களின் ,பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த! வேண்டும்
ReplyDelete