Saturday, October 12, 2013

தீக்குச்சிகளை பயன்படுத்தி பிரமீடு உள்ளிட்ட மாதிரி வடிவங்கள்! அசத்தும் கீழக்கரை மாணவர்!




கீழக்கரையை சேர்ந்த மாணவர் அப்துல் ஹமீது  கீழக்கரை முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் (B.Arch)கட்டிட கலை துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.இவரது தந்தை சீனி இப்ராஹிம் துபாயில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.

இம்மாணவர் புதுமையான முயற்சிகளில் மிகுந்த ஆர்வமுடைய இவர் தீக்குச்சிகள் மூலம் பிரமீடு போன்ற வடிவமைப்பு உள்ளிட்ட மாதிரி கட்டிடங்களை உருவாக்கி வருகிறார்.

இது குறித்து மாணவர் அப்துல் ஹமீது கூறியதாவது,

 புராஜக்ட் பணிக்காக இது போன்ற தீக்குச்சி மூலம் மாதிரி  பிரமீடை உருவாக்கினேன்.இன்னும் சிலவற்றை உருவாக்கி வருகிறேன்.எதிர்காலத்தில் சிறந்த கட்டிடகலை வல்லுனராக உருவாகி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எனது முயற்சிகள் இருக்கும் என்றார்.


1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாOctober 12, 2013 at 7:22 PM

    கீழக்கரையின் நம்பிக்கை நட்சதிதிரமே,எதிர் காலத்தில் ஊரே போற்றி பாராட்டும் அளவுக்கு தலை சிறந்த கட்டிட கலை வ்ல்லனராக உருவாகி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உனது முயறசிகள் அனைத்திலும் வெற்றி வாகை சூட வல்ல நாயன் நற் கருணை புரிய இரு கரம் ஏந்தி துவா செய்கிறேன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.