Friday, October 25, 2013

“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து !! மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா! கட்டுரையாளர்: கட்டுரை:ஸஹீருதீன்எஸ். ஏ.


ஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை
 கட்டுரையாளர்: சஹிருதீன்

மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய் “மொழி” அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.  மொழியினை மிகச்சரியாக விளக்கிக் கூறினால் மொழியானது சப்தமிடும் வார்தைகள் மட்டுமல்ல ஓசையில்லா அசைவுகளும் கூடத்தான். ஒரு மொழியின் முக்கியக் குறிக்கோள் தகவல் பரிமாற்றம் தானே !! 

இதன் அடிப்படையில்
மழை வரும் முன் தன் தோகையை விரித்தாடும் மயில் மனிதனுக்கு சப்தம் இல்லாமல் சொல்கிறது மழை வரப்போகிறது என்று; மண்ணில் புதைந்த சிறுவிதையில் இருந்து தன் மெல்லிய சக்தி கொண்டு பூமியை முட்டிக்கொண்டு வெளிவரும் முதல் இலை, நான் உங்களுக்கு பயன் தர வந்துவிட்டேன் என கூறுகிறது; இது தான் தன் உலகமோ ?? என சந்தேகத்தில் இருந்த கோழிக்குஞ்சு முட்டைத் தோடுகளை உடைத்துக் கொண்டுவந்து “இன்று எனக்கு பிறந்தநாள்” என நம்மிடம் மொழி பேசுகின்றது”.

உலகில் இன்று வரை 6500க்கும் மேற்பட்ட  மொழிகள் பேசப்படுகின்றன, இதில் பழக்கதில் இருந்து பேசப்படாமல் போன மொழிகளும் பல. ஆனால் இன்றைய நாகரீக உலகம் ஒரே ஒரு மொழியை மட்டும் தன் தலையில் தூக்கி வைததுக்கொண்டு ஆடுகின்றது ! அதேதான், அந்த மொழியே தான் !! ENGLISH!! 

ஏன் இந்த மொழிக்கு மட்டும் இவ்வளவு மவுசு ?? மனிதனின் வாழ்க்கையில் அங்கு இங்கு என எங்கு பார்த்தாலும் இந்த மொழியின் ஆக்கிரமிப்பாய்த்தானே உள்ளது ?? இந்த கேள்விக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் ஒரு மிக முக்கியமான காரணம் உண்டு, அந்த காரணத்தை இக்கட்டுரையின் இறுதியில் நீங்களே அறிவீர்கள்
இம் மொழி இல்லை என்றால் உலகமே அசையாது என்ற சூழலும் வந்து விட்ட்து ஆனால் நமது பெற்றோர்களிடமோ அல்லது நமது வாப்புச்சா மற்றும் அப்பாமார்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்கள் பள்ளி பயிலும் காலத்தில் அவர்கள் அனைவருக்கும் பெரிய பூச்சாண்டியாய் இருந்தது அவர்களது ஆங்கில வாத்தியார் தான்.

இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து !! மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா !!!

என்ற அவர்கள் காலம் போய் ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்ற சூழலும் உருவாகிவிட்டது. கிரிக்கெட் கமெண்டரியில் பேசுவது போல தஸ்ஸ்..  புஸ்ஸ்..  என பேச பலருக்கும் ஆசை. இந்த ஆசைக்கு வயது வரம்பு கிடையது !! உண்மை என்ன வெனில் இம்மொழியை கற்றுக்கொள்வது மிக எளிமை. தற்போது இம்மொழியை எளிதில் கற்றுக் கொள்வது எவ்வாறு என பார்ப்போம். இது ஒருவரின் மொழித்திறனை பொருத்தே அமைகின்றது, ஆதலால் நாம் அடிப்படையில் இருந்து கற்று கொள்ள விரும்பும் ஒருவரது பார்வையில் இருந்து செல்வோம்.

இந்த கற்றுக்கொள்ளும் முயற்சியை நாம் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு மிகச்சரியாக ஒப்பிடலாம், ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமாகவும், அதிகமாகவும் தேவைப்படுவது “செங்கல்” மற்றும் “சிமெண்ட்” தானே !

 அதே போல வார்த்தைகள் (VOCABULARY) செங்கல்லாகவும் இலக்கணம் (GRAMMAR) சிமெண்ட்டினைப் போலவும் வார்த்தைகளை ஒன்றோடு ஒன்றை இணைத்து நமது தேவைக்கேற்ப வடிவமைத்து பேசுவதற்கு உதவுகின்றது. 

சராசரியாக 600 முதல் 1000 ஆங்கில வார்த்தைகள் தெரிந்திருந்தால் ஒருவரால் அடிப்படையாக ஆங்கிலம் பேச முடியும். ஆயிரம், ஐநூறு என்ற உடன் மலைத்துவிட வேண்டாம் ! 
இதற்கு நான் உஙகளுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு சுவாரசியமான உண்மயைச் சொல்கிறேன். சமீபத்தில் நான் செய்த ஒரு சிறு ஆய்வில், நாம் பேசும் 100 வார்தைகளில் 40-ல் இருந்து 60 வார்த்தைகள் ஆங்கில வார்தைகளாக அமைவதைக்கண்டேன். சற்று கவனியுங்கள்.

TV, FAN, RADIO, PHONE,  MOBILE, COMPUTER, LAPTOP, PENDRIVE, SHIRT, PANT, CURRENT, BIKE, CAR, PETROL, TABLE, SOFA, TOWEL, KERCHIEF, ELECTRICIAN, MOTOR, PIPE, SHOWER, SPEAKER, MOUSE, KEYBOARD,  WATCH, ENGINE, BREAK, CALL, SCHOOL, TUTION, LEAVE, PEN, PENCIL, NIGHT, SIR, MADAM, BUS, MESSAGE, SCAN, MAIL, TEA, COFFEE, JUICE,  ICE CREAM,  EXAM, TEST, MATCH, TROUSER, PASTE, SOAP, SHAMPOO, UNCLE, AUNTY, ASSIGNMENT, AUTO, ROAD, SPEED BREAKER, XEROX, PRINTOUT, PICNIC, TOUR, RATE CUTTER, BOOSTER, INTERNET, FACEBOOK, POST, HOSPITAL, CLINIC, GYM, CHAIN, SHOE, COMPUTER, LAPTOP, TABLET, MODEM, REMOTE, BEDSHEET, WINDOW, MARRIAGE, CLASSROOM, PASS, FAIL, KEY CHAIN, PLUMBER, DADDY, MUMMY,  GIFT, TIE, SPRAY, FLIGHT, NIGHT, STOVE, PLATE, SPOON, TOWEL, PERFUME, PRAYER, FAST, LATE, OFFICE.

இது அனைத்தும் தமிழ் வார்த்தைகளா என்ன ?? நான் குறிப்பிட்டது மட்டுமே 100 வார்த்தைகள், இன்னும் நீண்டு கொண்டே போகும். இப்படி நாம் பேசும் இரண்டு வார்த்தைகளில் ஒன்று ஆங்கில வார்த்தையாக அமைகிறது. இதில் இன்னும் சுவாரசியம் என்ன வென்றால் நாம் தான் இப்படி பேசுகிறோம் என்று பார்த்தால் நமது கன்னுமாமார்களும், வாப்புச்சாமார்களும் நாம் பேசுவதில் பாதியை பேசுகிறார்க்ள் என்பது தான் !! அதனால் நமக்கு400 – 600 வார்த்தைகள் இயல்பாகவே தெரியும். இன்னும் 400 வார்த்தைகள் தானே எளிதில் கற்றுக்கொள்ளலாம், கவலை வேண்டாம் !

அடுத்ததாக நம்ம சிமெண்ட் அதுதான் நம்ம இலக்கணம் (GRAMMER). இதன் தரம் மிக முக்கியம். இதை வைத்தே தேவைக்கேற்ப நம்மால் வார்த்தைகளை இணைத்து சரிவர பேசமுடியும். ஆதலால் இதனை கற்றுக்கொள்வதில் சற்று கவனம் தேவை, ஆனால் இதை கற்றுக்கொள்வது மிகவும் சுலபம்.

கட்டிய கட்டுமானதின் மீது அடிக்கடி தண்ணீர் ஊற்றி அதனை வலுப்படுத்துவது போல் நாம் கற்றுக்கொண்ட வார்த்தைகளை அடிக்கடி நினைவுகூர்ந்து பேச்சுவழக்கில் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அது மனதில் உறுதியாக நிற்கும், ஏனெனில் புதிதாய்க் கற்றுக்கொண்ட வார்த்தைகள் எளிதில் மறந்துபோக அதிக வாய்ப்புள்ளது

சாதாரணமாக வாழ்வதற்க்கு ஒரு மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அடிப்படையான வீடு போதும் அல்லவா ? அதுபோல அடிப்படையாக ஆங்கிலம் பேசுவதற்க்கு (BASIC COMMUNICABLE ENGLISH). நான் மேற்கூறிய முயற்சிகள் போதுமானது !! இதற்கு மேல் மாடிக்கு மேல் மாடிகட்டுவதும், அழகாக்குவதும் நமது எண்ணத்தையும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

இனி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கனும் அல்லவா ? இப்பொழுது தான் நமது நண்பர்கள், சொந்தக்காரர்கள் என அனைவரிடமும் ஆலோசனைக்கேட்போம். என்ன கலர் அடிப்பது, இதை எங்கேவைப்பது, அதை எங்கே வைப்பது என அனைத்து திசைகளில் இருந்தும் ஐடியாக்கள் குவியும். அதனால் இப்பொழுது டிப்ஸ் & ஐடியாஸ்.

டிப்ஸ்1: தங்களின் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் தம்பி, தங்கை மற்றும் மருமகபிள்ளைகளின் ஆங்கில கதை புத்தகத்தைஎடுத்து வாசியுங்கள். இதில் மிக எளிமையான ஆங்கில வார்த்தைகள் தான் பயன் படுத்தப்பட்டு இருக்கும். நம்மால் எளிதில் புரிந்து கொள்ளவும் புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளவும் இது உதவும்.

டிப்ஸ்2: கதைப்புத்தகங்கள் படிப்பது சுலபமாக புரிகிறதெனில் அடுத்ததாக செய்தித்தாள் (NEWSPAPER) படிக்கத் தொடங்குங்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் தெரியாத வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ள தொடங்கிவிட்டால். இது பெரும் பயன்தரும்
.
டிப்ஸ்3: இயன்றவரை ஆங்கிலம் பேசும் சூழ்நிலைக்குள் இருக்கப்பழகுங்கள். இது நமது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள சிறப்பாக உதவும்.

டிப்ஸ்4: தவறுகளை பற்றி சிறிதும் கவலைவேண்டாம். தவறுகளே நம்மை சிறப்பாக பேசவைக்கும் !! நாம் தவறு செய்யும் போது நம்மை மற்றவர்கள் திருத்துவார்கள். இதனால் நாம் இன்னும் வலுபெறலாம். “வெற்றிக்கு முற்றுப்புள்ளி மட்டுமே வைக்கத் தெரியும் ஆனால் தோல்வியால் மட்டும் தான் காற்புள்ளி வைக்க முடியும்”

டிப்ஸ்5: மற்றவர்கள் ஆங்கிலம் பேசுவதை கவனியுங்கள், அவர்கள் எவ்வாறு வார்ததைகளை பயன் படுத்துகிறார்கள் எனவும், அவர்களின் உச்சரிப்புகள் எவ்வாறு அமைகின்றன எனவும் கவனியுங்கள் (OBSERVATIONAL LEARNING). உதாரணமாக ஆங்கில நியூஸ் சேனல்கள், கிரிக்கெட் கமண்ட்ரி போன்ற ஆங்கில நிகழ்ச்சிகளை பார்த்து வாருங்கள். இதன் மூலமாக நாம் PHONETICS, USAGE OF WORDS, STYLE & WAY OF SPEAKING ஏன பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

டிப்ஸ்6: PRE DEFINED FORMAT என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது பேசுவதற்க்கு குறிப்பிட்ட TEMPLATE-களை வைத்துப் பேசிப்பழகுவதாகும். இதற்கு சரியான ஒரு எடுத்துகாட்டு சூரத்துல் ஃபாத்திஹா தான்.
 எந்த ஒருவரும் சூரத்துல் ஃபாத்திஹாவை உட்கார்ந்து மனப்பாடம் செய்ததில்லை. அடிக்கடி கேட்டு கேட்டு அதுவே நம் மனதில் பதிந்து விட்டது அல்லவா ? அதுபோல் ஒரு முறை பேசினால் இந்த இடத்தில் இப்படித்தான் பேசவேண்டும் என நமக்கே தெரிந்துவிடும்.

அடடே, ஒரு முக்கியமான விசயத்தையே மறந்து விட்டோமே. அது இல்லாமல் எப்படி வீட்டைக்கட்டுவது ?? அதுதான் அஸ்திவாரம் !!

நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும், மன உறுதியையும் அஸ்திவாரமாய் அமைத்து அதன் மீது உஙகள் வீட்டினை எழுப்புங்கள். வல்ல இறைவன் அதை உறுதியாக்குவான். இனி என்ன..! வீட்டைக்கட்ட தொடங்கவேண்டியது தானே ? மறக்காமல் வீடு குடியேறுவதற்கு என்னையும் அழையுங்கள். இதன் மூலம் ஒருவர் கல்வியை அறிந்து கொண்டார் ! சிறப்பாக பேசுகிறார் என்ற அகமகிழ்சியுடன் நிச்சயமாக வருவேன்.

இறைவன் அருளால் எனது முதல் கட்டுரைக்கு எண்ணிப்பார்க்க இயலாத வாழ்த்துக்களை அல்லாஹ் மிகப்பெரியமனிதர்களிடம் இருந்து எல்லாம் எனக்கு கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ் !!! 

எனக்கு வாய்ப்பளித்த மற்றும் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றி. கீழக்கரையின் முன்னேற்றத்திற்காக நான் ஒரு துடிப்புமிக்க மற்றும் படித்த இளைஞர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு இக்கட்டுரையை அந்த முயற்சிக்கு என்னுடய முதல் பங்களிப்பாக, கல்வி வளர்சிக்காக சமர்ப்பிக்கின்றேன்.

 இக்கட்டுரை அனைத்து தரப்பு மக்களுக்கும், முக்கியமாக தமிழ் வழியாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு Saheerudeen Klk என்ற எனது முகபுத்தக முகவரிக்கோ அல்லது +91-7871513370 என்ற எனது எண்ணிற்கோ தொடர்புகொள்ளுங்க்ள். உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும் உங்களது சந்தேகங்களை கீழக்கரையின் நலம் விரும்பி பாடுபடும்  முகப்புத்தக பக்கங்களில் போஸ்ட் செய்யுங்கள், நமது சகோதரர்கள் நிச்சயமாக உதவுவார்கள். மறவாமல் இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள். முக்கியமாக மாணவர்களுக்கு இந்த வழிமுறையை சொல்லுங்கள்.

சித்திரமும் கைப்பழக்கம் !! ஆங்கிலமும் நாப்பழக்கம் !!
விளைவோம் ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை நோக்கி..
இன்ஷா அல்லாஹ் !



4 comments:

  1. கீழக்கரை அலி பாட்சாOctober 25, 2013 at 3:28 PM

    சகோதரர் சஹிருதீன் மாற்றி யோசித்திருக்கிறார். வள்ம் மிக்க கருத்துகள். அடியேனின் அன்பு கோரிக்கை. வீடு கட்ட சிமெண்டும், செங்களும் எவ்வளவு முக்கியமோ அது போல மணலும் அதி முக்கியம். அவர் தம் ஆய்வு கட்டுரையில் இத்னையும் இணைத்திருந்தால் கூடுதல் தகவலாக இருக்கும்.இருப்பினும் மனம் நிறைந்த் பாராட்டுகள்.அடுத்த ஆய்வை வெகு சீக்கிரம் எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாOctober 25, 2013 at 3:34 PM

    உச்சரிப்புக்கு மணலை மேற்கோள் காட்டலாம்.தரமான கட்டுமானத்திற்கு மணலின் பங்கு மிக மிக முக்கியம்.உச்சரிப்பு சரியாக இல்லை என்றால் கேட்பதற்கு நாரசாரமாக இருக்கும் தானே

    ReplyDelete
  3. thamby Saheerudeen menmelum valara valthukal!!!! ivarai samuthayathuku padaipaliyaha arimugapaduthiya Keelakarai Times-ku nandri!!!!

    ReplyDelete
  4. thamby Saheerudeen menmelum valara valthukal!!!! ivarai samuthayathuku padaipaliyaha arimugapaduthiya Keelakarai Times-ku nandri!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.