Friday, October 25, 2013

கீழக்கரை பழைய குத்பா பள்ளியில் ஊர் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை!



செய்தி மற்றும் படம் : அபு சாலிஹ்

இந்தியாவின் பல நூற்றாண்டு பழமைமிக்க பள்ளியான பழைய குத்பா பள்ளியில் இன்று அதிகாலை பஜர் தொழுகைக்கு பின் அல்லாஹுவின் திருமரையாம் திருகுரான் ஓதப்பட்டு, அதனை தொடர்ந்து ரசூலுள்ளஹ்வின் பெயரால் புர்தா சரீப் பாடபெற்று, அதனை தொடர்ந்து திக்ரு செய்து அல்லாஹுவின் திருநாமங்கள் முழங்கி பின் கூட்டாக யாசீன் சூரா ஓத பட்டது. 

இறுதியாக ஊர் நலன் கருதி, பாலா முசீபதுகள் நீங்கவும், இறைவனின் பாதுகாப்பு பெறவும், இயற்கையால் செயற்கையால் ஏற்படும் அழிவுகளில் இருந்து பதுக்கவும், பலனுள்ள மழை வேண்டியும் , குழப்பங்கள் நீங்கவும், ஒற்றுமை வளரவும், நடை பெற்று கொண்டு இருக்கும் பள்ளி வேலை பாடுகளில் எந்த குறையும் ஏற்படாமல் தங்கு தடை இன்றி பாதுகாப்பாக வேலைகள் நடை பெறவும், ஊரார் ஒன்று பட்டு திகழவும், ஊரில் தெருவில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து நலம் பெறவும். அனைத்து மக்களையும் நோய் நொடிகளில் இருந்தும் ஆபத்துகளில் இருந்தும் குழப்பங்களில் இருந்தும் பாதுகாத்து அருள் புரிய கீழக்கரை அணைத்து ஆலிம் பெருமக்களும் (30 க்கும் அதிகமானோர்) திரளாக பங்குபெற்று கண்ணீருடன் இறைவனை வேண்டினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்தூம் சின்நீன லெப்பை அலீம் அவர்களின் வாரிசு பேரர் ரான மௌலான மௌலவி Nainar Mohamed Rahmani (Rahmaniya Matharasa Adhirama pattinathil ullathu athan Perasiriyar) ஆலீம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.  

ஜமாத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழைய குத்ப பள்ளி தலைமை இமாம் மௌலான மொவ்லவி ஹைதர் அலி மன்பயீ, இமாம் மௌலான மௌலவி கலீல் அலீம் மற்றும் பள்ளியின் முஅதீன் ரபீக் ஆகியோர் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தனர். பழைய குத்ப பள்ளி ஜமாஅத் முன்னால் துணை தலைவர் சீனி முஹமது , தற்போதைய துணை தலைவர் கிதுர் முஹமது, சீனி ஹசனா, ஜைனுல் அப்தீன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.