Saturday, October 5, 2013

பணிகள் நிறைவு பெறாமல் காண்ட்ராக்டர்களுக்கு பணம் முழுவதும் வழங்கப்பட்டது ஏன்? கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி!



பணிகள் முடிவடையாத நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு முழுத்தொகை வழங்கியது ஏன் என கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

கீழக்கரை நகராட்சிக் கூட்டம் தலைவர் கதரியா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி வருமாறு:
கவுன்சிலர் ஜெயபிரகாஷ் : 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடிக்கு மேல் வேலை வழங்கப்பட்டதில் ரூ.87 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை ரத்து செய்ய வேண்டும்.  குடிநீர் குழாய் பணி நிறைவு பெறாமல், ஆய்வு செய்யப்படாமல் குறிப்பிட்ட கான்ட்ராக்டருக்கு 95 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டது.

தலைவர்: பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் சட்ட விதிமுறையின்படி டெண்டர் பணிகளை எடுக்கின்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் பணி களை நிறைவேற்ற வேண் டும். இன்னும் 2 மாதத் துக்குள் அனைத்து பணி களையும் முடிக்க காண்டி ராக்டர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும். அதன்பின்னரும் முடிக்கா விட்டால் டெண்டர் பணியை ரத்துசெய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

கவுன்சிலர் பாவா செய்யது கருணை : எனது வார்டு பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கிழக்குத்தெரு ஆட்டோ ஸ்டாண்டு முதல் பழைய கஸ்டம்ஸ் அலுவலகம் வரை வாறுகாலை அரை அடி உயர்த்தி மூடிகள் போட ஒப்பந்தம் வழங்கப்பட்டது.வேலை பாதிதான் முடிந்துள்ளது. ஆனால், முக்கால்வாசி தொகை வழங்கப்பட்டுள்ளது. .

கவுன்சிலர் சாகுல் ஹமீது : பிளாஸ்டிக் பை மற்றும் கப்களுக்கு நகராட்சி தடைவிதித்துள்ளது. ஆனால், சிறு வியாபாரிகள் அதை விற்பனை செய்து வருகின்றனர். அவற்றை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். தடை விதிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

துணைத்தலைவர் ஹாஜா முகைதீன்
சாதரணமாக ஒரு பொருளை படித்து விவாதம் நடப்பதற்கு குறைந்தது 10 நிமிடம் ஆகும். இந்நிலையில் 42 தீர்மானங்கள் உள்ள அஜென்டாவை ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துள்ளனர். இதுபோல் எங்கும் கூட்டம் நடந்ததில்லை. ஏன் என்று கேட்டால் அப்படித்தான் என தலைவர் பதில் கூறுகிறார். நகராட்சி தலைவரின் சார்பில் நிர்வாகத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது.

நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த முறைகேடுகள் மற்றும்தலைவரின் கணவர் தலையீடுகள் தொடர்பான கண்டன அறிக்கையைதுணை தலைவர் ஹாஜா முகைதீன் வாசித்தார்பின்அந்த அறிக்கையின் நகலைகவுன்சிலர்களுக்கு வழங்கினார்.

தலைவர் ராவியத்துல் கதரியா: 
மன்றத்தில் இல்லாதவர்களை பற்றி துணைத்தலைவர் பேசுவது கண்டிக்கத்தக்கது. ஒருங்கி ணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கீழக்கரை நகர்முழுவதும் ரூ.5 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். வினியோக குழாய்களும் மாற் றப்படும். இந்த பணிகள் முடிந்ததும் மேலும் நிதி ஒதுக்கீடு பெற்று தோண்டப் பட்ட சாலைகள் புதுப்பிக் கப்படும். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்படும். இவ்வாற கூட்டத்தில் விவாதம் நடந்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் துல்கருணை, சாகுல்ஹமீது, அஜ் மல்கான், ரபியுதீன், முகைதீன் காதர், சித்திக்அலி, அன்வர்அலி, ஹாஜாநஜ்முதீன், அஜீசாபானு, பாத்திமா, மீனாள், ஜரினாபானு, மீரா பானு,தாஜின்அலிமா மற்றும் பல கவுன்சிலர்கள் கலந்து கொண் டனர்.

 கீழக்கரை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செலவில் 10 சோடியம் விளக்குகள், 15 சி.எப்.எல் மற்றும் 3 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படஉளள்து. இதற்கான பணிகளை நகர சபை தலைவர் ராவியத்துல் கதரியா தொடங்கி வைத்தார்.



4 comments:

  1. கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் 5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது என்றும் தனது வார்டு மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தது இல்லை , எப்பொழுதும் கூட்டத்தில் நமக்கு ஏதும் சமந்தம் இல்லாத மாதிரி அமைதியாக இருந்த 5வது வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது இந்த கூட்டத்தில்தான் அதிசயமாக வாய் திறந்து இருக்கிறார் , அதுவும் அடுத்தவன் (மற்றவர்) பொலப கேடுபதருக்கு , இது எல்லாம் ஒரு பொழப்பு, சீ

    ReplyDelete
  2. பாவம் துணை சேர்மனுக்கு அடிச்ச உழலில் ஏதும் பங்க்கு கிடைகள போல , ரொம்ப பேசுராரு , எந்த தலைவரும் அவர்கள் தலைமை பணிய சரியாக உண்மையாக மக்களுக்காக செய்வது இல்லை அது அதன் எல்லா பிரச்சனைக்கு முதல் காரணம்,துணை சேர்மன் கூட அவர் பொருபெற்று இருக்கும் தலைவர் பதவிகளில் உட்கார்து கொண்டு மக்களுக்காக உண்மைய செயல் படுவது இல்லை , யாருக்கும் அவர்கள் செய்யும் தவறுகள் பற்றி தெரிவதில்லை , மற்றவர்களின் குறைகளை மட்டும் குறை கூறி கொண்டு திரிகிறார்கள் , முதலில் நம்மை நாம் திருத்தி கொள்ள வேண்டும் , பிறகு மற்றவர்களின் குறைகளை பற்றி பேசலாம்

    ReplyDelete
  3. தெரு விளக்கு கரண்ட் மற்றும் சூரிய மின்சக்தி இரண்டிலும் இயங்கக்கூடியதாக அமைக்க பட வேண்டும் ,கரண்ட் இல்லாத பொழுது சூரிய மின்சக்தில் இயங்கக்கூடியதாக அமைத்தால் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு முதியவருக்கு சிறியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் .

    ReplyDelete
  4. தெரு விளக்கு கரண்ட் மற்றும் சூரிய மின்சக்தி இரண்டிலும் இயங்கக்கூடியதாக அமைக்க பட வேண்டும் ,கரண்ட் இல்லாத பொழுது சூரிய மின்சக்தில் இயங்கக்கூடியதாக அமைத்தால் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு முதியவருக்கு சிறியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் .

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.